பிறந்த சில நொடிகளில், சொந்த தாயால் கொலை செய்யப்பட்ட குழந்தை!

டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த 17 வயது தாய், தன் சொந்த குழந்தையினை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்!

Last Updated : Feb 28, 2018, 02:04 PM IST
பிறந்த சில நொடிகளில், சொந்த தாயால் கொலை செய்யப்பட்ட குழந்தை! title=

டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த 17 வயது தாய், தன் சொந்த குழந்தையினை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்!

டெக்ஸாஸ் மாகானத்தின் எய் போஸோ பகுதியை சேர்ந்தவர் எரிக்கா கோம்ஸ், கர்ப்பவதியான இவர் குளியலறையில் இருக்கையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 

பிறந்து சில நிமிடங்களே ஆன அக்குழந்தையின் உடலின் 9 இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார், மேலும் இறந்த குழந்தையின் உடலீனை பிளாஸ்டிக் காகிதத்தினால் சுற்றி அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

அவரது பக்கத்துவீட்டு சிறுவன் மூலம் இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதனால் டெக்ஸாஸ் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளனர். 

அக்கம்பக்கத்தினர் இவ்விசயத்தினை கண்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இப்பெண் ஏன் இவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரணா செய்யப்பட்டு வருகிறது!

Trending News