தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயாராகியுள்ள அரசு..!

ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 12:48 PM IST
  • தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
  • ஆப்கானிஸ்தானில், தலிபான் தலைமையிலான அரசை, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயாராகியுள்ள அரசு..! title=

லண்டன்: ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துக்கொண்டு செல்வது அனைவரும் அறிந்த ஒன்றே.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில், தலிபான் தலைமையிலான அரசை, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஆப்கன் விவகாரம் குறித்து, லண்டனில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் . அதில்,"ஆப்கன் பிரச்னைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம்.

ALSO READ 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானில் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் அடைய மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1,615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள். 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது "என்று அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News