ஆப்கானிஸ்தான் இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என அழைக்கப்படும்: தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 12:00 PM IST
ஆப்கானிஸ்தான் இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என அழைக்கப்படும்: தாலிபான்கள் title=

ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய பிறகு, தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது. இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தாலிபான்கள் கையில் சென்றிருக்கிறது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் (Taliban) ஆட்சியை அகற்றி அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சியை நிறுவியது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும்  தாலிபான்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கப்படைகளும் ஐரோப்பிய படைகளும் களத்திற்கு வந்தனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என அவர் அறிவித்தார். அதனையடுத்து முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றத் தொடங்கிய தாலிபான்கள் இறுதியாக தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ALSO READ: தாலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான்: தாலிபானின் இந்த தலைவர்தான் அடுத்த ஆப்கான் அதிபரா?

தாலிபான்களின் கை ஓங்கியதை அடுத்து அதிகாரத்தை அவர்களுக்கே விட்டுத்தர அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) ஒப்புக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேறிவிட்டார். இதனையடுத்து காபூலில் உள்ள அதிபர் மாளிகை தாலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

 இதனையடுத்து அங்கு தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பழமைவாத தாலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, மூட்டை முடுச்சிகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் ஆப்கானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்த விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். 

தாலிபான்கள் ஆப்கானை (Afghanistan) கைப்பற்றியுள்ளதை அடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடவுள்ளது குறிப்பிடத்தக்க்கது.

ALSO READ: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி; ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News