Afghanistan: நெயில் பாலிஷ் பூசும் பெண்களின் விரல்களை துண்டிக்க தாலிபான் உத்தரவு

தாலிபான் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை நரகத்தை விட மோசமாக உள்ளது. தாலிபான் பெண்கள் நெயில் பாலிஷ் பூசக் கூடாது, ஜீன்ஸ் அணியக்கூடாது என  உத்தரவு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2021, 09:29 AM IST
  • தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி குறித்த செய்திகள் தினமும் வருகின்றன
  • பெண்கள் வேறு நாட்டுக்கு கடத்தப்படுகிறார்கள்
  • பயங்கரவாதிகள் பலரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டனர்.
Afghanistan: நெயில் பாலிஷ் பூசும் பெண்களின் விரல்களை துண்டிக்க தாலிபான் உத்தரவு  title=

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி குறித்த செய்திகள் தினமும் வெளிவருகின்றன. தாலிபான்கள் வசம் ஆப்கான் வந்ததும், மக்களை பழி வாங்குவது போன்ற மனநிலையில், ஆப்கானிஸ்தான் மக்களை துன்புறுத்துகின்றனர். தாலிபான்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர்,. அதோடு,  பெண்கள் கை விரல்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுகளை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சில இளைஞர்கள் கூட ஜீன்ஸ் அணிந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டனர்.

ஜீன்ஸ் அணிந்ததால் தாக்கப்பட்ட இளைஞர்

'தி சன்' பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று, ஆப்கானிஸ்தான் இளைஞன் ஒருவர் எதிர்கொண்ட தாலிபான்களின் அராஜகம் குறித்த செய்தியை வெளியிட்டது. மேலும் ஜீன்ஸ் அணிந்ததற்காக அவரும் அவரது நண்பர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டதாக கூறினார். அந்த இளைஞர் தனது நண்பர்கள் சிலருடன் காபூலின் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தலிபான்கள் அவரை தடுத்ததாக கூறினார். மேலும் ஜீன்ஸ் அணிவது இஸ்லாத்திற்கு அவமரியாதை என்று விவரித்து, பயங்கரவாதிகள் முதலில் அவர்களைத் தாக்கினர், பின்னர் அவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எச்சரித்ததாக அந்த இளைஞன் தெரிவித்தார்.

ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!

குதிகால் உயர செருப்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளன

ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய ஆடைகளை அணியாததற்காக ஒரு பத்திரிகை நிருபரும் தாலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் செய்தித்தாள் Etilaatroz இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், கந்தஹாரில், தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபத்வாவில் நெயில் பாலிஷ் பூசுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதை மீறி யாராவது நெயில் பாலிஷ் பூசிக் கொண்டால், அவரது விரல்கள் துண்டிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பெண்கள் காலடி சத்தத்தை எந்த ஒரு அந்நியரும் கேட்காதபடி, குதிகால் உயர செருப்பு அணியக் கூடாது என்றும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

கட்டாயத் திருமணம்

தலிபான் போராளிகளால் பல பெண்கள் கடத்தப்பட்டு மற்ற நாடுகளில் விற்கப்படுகிறார்கள். சிலர் தீவிரவாதிகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டனர். முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன், ஆப்கானில் தாலிபான் ஆதிக்கம் இருந்த போதும், தலிபான் போராளிகள் பெண்கள் மீது இதே போன்ற கொடூரங்களை செய்தனர். பெரும்பாலான பெண்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதற்கான காரணம் இதுதான். காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். யாராவது தங்களுக்கு உதவி செய்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News