உலகின் மிக வலிமையான புயல்: வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் சிக்கலில் உள்ள ஜப்பான் மற்றும் சீனாவுக்கு மற்றொரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டின் வலுவான உலகளாவிய புயலால் இந்த இரு நாடுகளும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த புயல் கிழக்கு சீனக் கடல் வழியாக ஜப்பானின் தெற்கு தீவுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஹிமானோர் தற்போது மணிக்கு 160 மைல் அதாவது மணிக்கு 257 கிமீ வேகத்தில் நகரும் நிலையில், இதன் காரணமாக, எழும் அலையின் உயரம் அதிகபட்சமாக 50 அடி (15 மீ) வரை பதிவாகியுள்ளது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
Ryukyu தீவை நோக்கி செல்லும் புயல்
இதுவரை பதிவாகியுள்ள இந்த புயலின் வேகத்தின் அடிப்படையில், 2022-ம் ஆண்டின் மிக வலிமையான மற்றும் வலிமையான புயலாக ஹின்மனோர் இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானின் ஒகினாவாவில் இருந்து கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவில் காலை 10 மணியளவில் புயல் மையம் கொண்டிருந்ததாகவும், மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் Ryukyu தீவை நோக்கி நகரும் என்றும் ஹாங்காங் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், ஆகஸ்ட் மாதத்தில் இதற்கு முன் 2 முறை மட்டுமே புயல்கள் வீசியுள்ளன. ஆனால், தற்போது உருவாகியுள்ள புயலே மிகவும் வலுவானதாகும்.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
எனினும் வரும் நாட்களில் சூப்பர் டைபூன் அதன் வலிமையை இழக்கும் என்று அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் கணித்துள்ளது. கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பருவகால புயல் முன்னறிவிப்பின் முதன்மை ஆசிரியர் Phil Klotzbach, நாங்கள் கடல் தரவுகளை விரிவாக பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று கூறினார். 70 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே சூறாவளி ஏற்பட்டது. முதல் புயல் 1961ம் ஆண்டும், இரண்டாவது புயல் 1997ம் ஆண்டும் வந்தாலும், இரண்டுமே இம்முறை வீடும் புயலின் வேகத்துடன் ஒப்பிடுகையில், இறைவு தான் என அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ