பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா உதவ வேண்டும் -இலங்கை!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 11, 2019, 08:40 AM IST
பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா உதவ வேண்டும் -இலங்கை! title=

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்!

சமீபத்தில் இலங்கை சென்ற பிரதமர் மோடியிடம், இலங்கை பிரதமர் இக்கோரிக்கையினை முன்வைத்திருப்பதாக தெரிகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கையில் பயங்கரவாத அச்சுருத்தல்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை செல்ல பிற நாட்டு தலைவர்கள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் முதல் தலைவராக இந்திய பிரதமர் மோடி இலங்கை சென்றார்.
 
இலங்கையில் அவர் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கை மீண்டும் எழுச்சி பெறும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் துணிவை தோற்கடித்துவிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுன் நடந்த சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவிக்கையில்., "தாமதமாக நடைபெற்றுவந்த இந்தியா-இலங்கை இணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களை விரைவாக முடிப்பதாக பிரதமர் மோடிக்கு உறுதி அளித்துள்ளேன். இந்தியா, இலங்கை இணைந்து மேலும் பல கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதன் மூலம் இருநாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும்.

இலங்கைக்கு மோடி தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது இலங்கையின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், இன்னும் அதிக மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் தாங்கள் பேசியதாவும், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்க வேண்டும் எனவும் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Trending News