’சோனி மியூசிக்’ - ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு..!

ரஷ்யாவில் தங்களுடைய சேவைகளை நிறுத்துவதாக பேஸ்புக், டிவிட்டர், டிக் டாக் வரிசையில் சோனி மியூசிக் நிறுவனமும் இணைந்துள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 11, 2022, 12:42 PM IST
  • பேஸ்புக், டிவிட்டர், டிக் டாக் வரிசையில் சோனி
  • ரஷ்யா - சேவைகளை நிறுத்தும் சோனி மியூசிக்
  • ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க முடிவு
’சோனி மியூசிக்’ - ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு..! title=

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உலக நாடுகள்பல ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன. அதன்படி, பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவையும் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளது.

Tik tok

மேலும் படிக்க | உக்ரைனுக்கு புதுவிதமாக உதவும் பிரபல வெப்சைட்!

இந்நிலையில், யுனிவர்சல் மியூசிக் குழுமத்தைத் தொடர்ந்து பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனமும் ரஷ்யாவில் தங்களுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள சோனி நிறுவனம், உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்களது உலகளாவிய மனிதாபிமான நிவாரண முயற்சியைத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளது. மேலும், சேவை நிறுத்தி வைக்கப்படும் காலங்களில் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

music

மேலும் படிக்க | உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News