ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்...மணற்புயலால் அரபு நாடுகள் அவதி

சவுதி அரேபியா, ஈராக் போன்ற அரபு நாடுகளில் வீசிய மணற்புயலால் பல்வேறு பகுதிகள் புழுதி சூழ்ந்து ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்டன.

Written by - Chithira Rekha | Last Updated : May 17, 2022, 05:54 PM IST
  • அரபு நாடுகளை வாட்டும் புழுதிப்புயல்
  • ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்
  • இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்...மணற்புயலால் அரபு நாடுகள் அவதி title=

பாலைவனங்கள் அதிகமுள்ள அரபு நாடுகளில் மணற்புயல் ஏற்படுவது வழக்கம் என்றாலும் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட தீவிரமான மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், மணற்புயல் காரணமாக சில நூறு மீட்டர் தூரத்திற்கு புழுதி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது.

மேலும் படிக்க | இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க

Sand storm in Arab countries

வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத் நகரின் மத்தியப் பகுதியில் வீடுகள், கார்கள் உள்ளிட்டவை மணலால் மூடப்பட்டுள்ளன. மணற்புயல் தீவிரமாக இருந்தாலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

Sand storm in Arab countries

இதேபோல, சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஈராக்கில், ஏப்ரல் மாதத்தில் இருந்து எட்டு மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கடுமையான வறட்சி, குறைந்த மழைப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினாலேயே மணற்புயல்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானில், "மோசமான வானிலை" மற்றும் மணற் புயல் காரணமாக பல மாகாணங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | இந்தியாவைக் குறை கூறுவதால் பிரச்சனை தீராது...ஜி-7 நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த சீனா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News