ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்; உளவாளி அதிர்ச்சித் தகவல்

Putin Health issue: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை புற்றுநோயால் மோசமடைந்து வருவதாகவும் அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் எனவும்  மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி ஒருவர் கூறியுள்ளார். 

Written by - Chithira Rekha | Last Updated : May 31, 2022, 08:42 PM IST
  • புற்றுநோயால் மோசமடைகிறதா புடினின் உடல்நிலை?
  • 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என உளவாளி தகவல்
  • கண்பார்வையும் மங்கி வருவதாக செய்தி
ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்; உளவாளி அதிர்ச்சித் தகவல் title=

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

புடினின் பார்வை மங்கி வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக  ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் புடினின் கண்பார்வை மங்கி வருவதாகவும், தொலைக்காட்சியில் தோன்றும்போது ஏதேனும் படிக்க நேர்ந்தால் அதனைப் பெரிய எழுத்துகளில் எழுதினால் மட்டுமே அவரால் படிக்க முடியும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இருக்கும் அளவுக்குப் பெரிய எழுத்துகளில் எழுதினால் மட்டுமே படிக்கும் அளவுக்கு அவரது கண்பார்வை மோசமடைந்து வருவதாகவும், அவரது  கை, கால்கள் கட்டுப்பாடின்றி நடுங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அதனால் அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு அவரது உடல்நிலை செயலிழக்க வாய்ப்புள்ளதால் அவரது அதிகாரம் வேறொருவரிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புடினின் உடல்நிலை குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.

மேலும் படிக்க | புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா... வெளியான அதிர்ச்சித் தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News