அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!

ரஷ்யா-உக்ரைன் போர்: அணு ஆயுத தாக்குதலுக்கு பயந்து உக்ரேன் மக்கள் அயோடின் மாத்திரைகளை வாங்கி குவித்து வரும் நிலையில், அயோடின் மாத்திரைகள் உண்மையில், அணு ஆயுத தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்குமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2022, 12:28 PM IST
  • கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போர்.
  • உக்ரைனின் மக்கள் தொடர்ந்து அயோடின் மாத்திரைகளை வாங்கி குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
  • அயோடின் மாத்திரைகள் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்! title=

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் அணுகுண்டு தாக்குதல் நடத்தக் கூடும் என, அமெரிக்கா, உக்ரைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பது குறித்தும் பேசப்பட்டது. இதற்கிடையில், உக்ரைனில் உள்ள சாமானிய மக்களுக்கு புட்டின் அச்சுறுத்தல் மிகவும் பதற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் உக்ரைனின் மக்கள் தொடர்ந்து அயோடின் மாத்திரைகளை வாங்கி குவித்த வண்ணம் இருக்கிறார்கள்அயோடின் மாத்திரைகள் அணுசக்தி தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைத்து மனிதர்களை காக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த மாத்திரைகள் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உக்ரைனில் விளாடிமிர் புட்டினின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரேனிய குடிமக்கள் இங்கு அதிக அளவில் அயோடின் மாத்திரைகளை வாங்குவதாக பல்வேறு சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அயோடின் மாத்திரைகளைத் தேடி ஏராளமான வாடிக்கையாளர்கள் தலைநகர் கியிவ் நகருக்கு தினமும் வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கெய்வ் நகர சபையால் கடந்த வாரம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் மாநகரில் உள்ள மருந்துக் கடைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்கும் என்று கூறிப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

உக்ரைன் மட்டுமல்ல, உக்ரைனைச் சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளும் அணு ஆயுதத் தாக்குதல் மற்றும் அதன் கதிர்வீச்சு பாதிப்புகளை எண்ணி பதற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளன . இதன் காரணமாக, ஐரோப்பாவின் சில நாடுகளில் ஏற்கனவே இந்த மாத்திரைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த குழப்பத்திற்கு மத்தியில், பின்லாந்தில் உள்ள பல மருந்து கடைகளில் இந்த மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அயோடின் மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதால், தேவைப்பட்டல் மட்டுமே மாத்திரைகள் வாங்குவாறு,  ஃபின்லாந்து சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியது. அதே சமயம் அணு ஆயுத தாக்குதல் நடக்கும் நேரத்தில் இந்த மருந்தை உட்கொண்டால் தான் பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த மருந்தை  தேவையில்லாத போது எடுத்துக் கொண்டாலோ, வழக்கமான உட்கொள்வதாலோ எந்த பயனும் இல்லை என்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே பலன் அளிக்கும் என்றும், எனவே அதிக மாத்திரைகள் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

அணு  ஆயுத தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் அணு சக்தி கதிர்வீச்சு ஏற்படும் போதெல்லாம், அதிலிருந்து வெளியாகும் கதிரியக்க பொருட்கள், சுவாசம் அல்லது அசுத்தமான உணவு மூலம் உடலுக்குள் நுழைகிறது. இதற்குப் பிறகு, அவை தைராய்டு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. கதிரியக்க பாதிப்பு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அதன் உடல்நல தாக்கம் பல ஆண்டுகளாக நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆணு ஆயுத தாக்குதல் நடந்த ஜப்பானில், இன்றும் கூட அதன் பாதிப்பை நாம் காணலாம்.

அணுசக்தி தாக்குதலின் கதிர்வீச்சிலிருந்து இந்த ஒரு மாத்திரை மனிதர்களைப் பாதுகாக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த விஷயத்தில் வல்லுநர்கள் பொட்டாசியம் அயோடைடு (KI) ஒரு வகையான அணுசக்தி அபாயத்திற்கு எதிராக சிறப்புப் பாதுகாப்பை வழங்குகிறது என்று கூறுகிறார்கள். அணு விபத்தால் அதிக அளவு கதிரியக்க அயோடினை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த அயோடின் மாத்திரைகள் கழுத்தில் இருக்கும் தைராய்டு, ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பி, இந்த கதிரியக்க அயோடினை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது என்றும்,  கதிர்வீச்சுக்கு எதிர்ப்பாக செயல்படுகிறது எனவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

அதாவது தைராய்டில் ஏற்கனவே பொட்டாசியம் அயோடைடு நிரம்பியிருந்தால், அணு தாக்குதலுக்கு பிறகு வளிமண்டலத்தில் இருக்கும் மற்றும் காற்றில் மிதக்கும் தீங்கு விளைவிக்கும் அயோடினை கிரக்கித்து கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். இந்த மாத்திரைகள் மிகவும் மலிவானவை மற்றும் உலகம் முழுவதும் எளிதாகக் கிடைக்கின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருப்பு வைத்துள்ளனர். இதுவே உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக விற்பனையாகிறது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அயோடின் மாத்திரைகள் வேறு எந்த வகையான கதிர்வீச்சிலிருந்தும் பாதுகாக்க முடியாது. ஒரு அணுகுண்டு பல்வேறு வகையான கதிர்வீச்சு மற்றும் உடலின் பல பாகங்களை சேதப்படுத்தும் கதிரியக்க கூறுகளை வெளியிட்டால், அதிலிருந்து அயோடின் மாத்திரைகள் பாதுகாக்காது. அத்தகைய சூழ்நிலையில், இந்த மாத்திரைகளை முற்றிலும் சார்ந்து இருப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகவும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்... ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News