லிவிவ்: ரஷ்யா உக்ரைன் மீது இரு மாத காலங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேலை நாடுகள் உக்ரேனிற்கு, ஆயுதங்களை பெருமளவு வழங்கி வருவதாக புகார் கூறிய ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் பிற சப்ளை-லைன் இலக்குகளை குண்டுவீசித் தாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் புதன் கிழமை ரஷ்யாவிடம் இருந்து செய்யப்படும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களில் உள்ள மின்சார வசதிகளை அழிக்க கடல் மற்றும் வான்வழி ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ரஷ்ய இராணுவம் கூறியது. மேலும், எரிபொருள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை பீராங்கி மற்றும் விமானங்களைக் கொண்டு தாக்கியதாகவும் ரஷ்ய ராணுவம் கூறியது.
புதன்கிழமை இரவு நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. மேலும் தலைநகரான கிவ் அருகே தாக்குதல்கள் பதிவாகியுள்ளன; மத்திய உக்ரைனில் செர்காசி மற்றும் டினிப்ரோவிலும், தென்கிழக்கில் ஜபோரிஜியாவிலும் தாக்குதல் நடத்தாக கூறப்பட்டது. டினிப்ரோவில், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் அங்குள்ள ஒரு பாலம் தாக்கப்பட்டதைக் காணாலாம்.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
உயிர் சேதம் அல்லது சேத அளவு குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. நாஜி ஜெர்மனியை சோவியத் ஒன்றியம் தோற்கடித்ததைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று வெற்றி தினத்தை கொண்டாட ரஷ்யா தயாராகி வரும் வேளையில், தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உக்ரைனில் வெற்றியை பிரகடனப்படுத்துவாரா அல்லது "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அவர் அழைப்பதை விரிவுபடுத்துவாரா என்பதை உலகம் உற்று நோக்குகிறது.
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ், நேட்டோ நாடுகள் சப்ளை செய்யும் ஆயுதங்களுக்கான முக்கிய நுழைவாயிலாக இருந்து வருவதால் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ரயில் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மேற்கத்திய ஆயுதங்களின் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் இருந்தன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கூறினார். பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, மேற்குலகம் "உக்ரைனிற்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கிறது" என்றார்.
மேலும் , தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையிலும் கடுமையான சண்டை மூண்டது. ஆனால் ஆலையை தாக்கியதாக உக்ரேனிய தளபதிகள் கூறுவதை ரஷ்ய அதிகாரி மறுத்தார்.
எனினும், உக்ரைனில் பீதியை ஏற்படுத்த ஏவுகணை பயங்கரவாத தந்திரங்களை ரஷ்யா கையாள்கிறது என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கான களமாகப் பயன்படுத்திய பெலாரஸ், புதன்கிழமை இராணுவப் பயிற்சிகளைத் தொடங்குவதாக அறிவித்தது. உக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், பெலாரஸ் சண்டையில் இணைந்தால் நடவடிக்கை எடுக்க உக்ரைன் தயாராக இருக்கும் என எச்சரித்தார்.
இதற்கிடையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதோடு, ஐரோப்பாவும் அமெரிக்காவும் மாஸ்கோவை பொருளாதாரத் தடைகள் மூலம் தண்டிக்க நினைக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரி புதன்கிழமை 27 நாடுகளைக் கொண்ட குழுவிற்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR