விரைவில் முதல் COVID-19 தடுப்பூசி சோதனை தரவை வெளியிடும் ரஷ்யா

இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற மருத்துவ ஆய்வுகள் குறித்த தரவுகளை ரஷ்யா விரைவில் வெளியிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 04:24 PM IST
விரைவில் முதல் COVID-19 தடுப்பூசி சோதனை தரவை வெளியிடும் ரஷ்யா title=

Coronavirus Vaccine Tracker: இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற மருத்துவ ஆய்வுகள் குறித்த தரவுகளை ரஷ்யா விரைவில் வெளியிடும். "முன்கூட்டிய மற்றும் மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில், அதாவது திங்கள்கிழமைக்குள் வெளியிடப்படும்" என்று சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவை (Mikhail Murashko) மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) செவ்வாயன்று, COVID-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு ரஷ்யாவாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். 

ALSO READ |  தடுப்பூசி வந்தாச்சு! கொரோனா வைரஸ் தொற்று எப்போது "END-க்கு" வரும்? பிப்ரவரி 2021

ரஷ்யா தனது முதல் கோவிட் -19 தடுப்பூசியை "ஸ்பூட்னிக் வி" (Sputnik V) என்ற பெயரில் பதிவு செய்தது. ரஷ்ய அதிகாரிகள் இது தடுப்பூசி பாதுகாப்பான, நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கியதாகக் கூறியுள்ளனர். 

தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்க ரஷ்யா (Russia) எடுத்த முடிவு சில நிபுணர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. சோவியத் யூனியனால் ஏவப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக "ஸ்பூட்னிக் வி" என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, அதன் இறுதி சோதனைகளை இன்னும் முடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

ALSO READ |  RUSSIAN COVID VACCINE: நமது நாட்டில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியா - ரஷ்யா ஆர்வம்

இந்த குற்றம்சாட்டை எதிர்கொண்ட சுகாதார அமைச்சர், "ஆராய்ச்சியில் கூடுதல் தரவுகளைப் பெற வேண்டியிருந்தது" என்பதே இதற்கு காரணம் என்று கூறியதுடன், "தடுப்பூசி ஒரு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஸ்பூட்னிக் வி" (Sputnik V) தடுப்பூசி மருத்துவ ஆய்வுகள் குறித்த தரவுகளை ரஷ்யா விரைவில் வெளியிடும் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வியட்நாம் ரஷ்ய COVID-19 தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளது. 20 நாடுகள் "ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி" வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல ஐந்து நாடுகளில் ஆண்டுக்கு 500 மில்லியன் தடுப்பூசி டோஸ் தயாரிக்க மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ALSO READ |  உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி: ரஷ்யாவிடம் 100 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்த 20 நாடுகள்

Trending News