கிவ்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் முடிவுக்கு வராத நிலையில், தொடரும் போரில் திங்களன்று, குறைந்தபட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர், மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ், அதிகாலையில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்ட சிறு குழந்தை உட்பட பலர் உயிரிழந்தனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் படைகளின் புதிய தாக்குதல் கவலைகளை மேலும் அதிகரிக்கிறது. கிழக்கில் இருந்து தப்பி வரும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு புகலிடமாகவும், முக்கிய விநியோக மற்றும் தளவாட மையமாகவும் மாறிய நகரத்தில் இந்த தாக்குதல் ஒரு பயங்கரமான போரை நீட்டித்தது.
மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
"Lviv மீது 5 இலக்கு ஏவுகணைத் தாக்குதல்கள்" என்று Lviv மேயர் Andriy Sadovy இன்று காலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான மேலும் விரிவான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 'தன் நாட்டை ஒடுக்கிய எந்தவொரு நபருடனும் அல்லது மக்களுடனும் யாரும் சமரசம் செய்ய விரும்பவில்லை. ஒரு தந்தையாகவும், ஒரு சாதாரண மனிதராகவும், நான் இதை நன்றாக புரிந்துகொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
'வாழ்வதற்குப் போராட வேண்டும்'
ஆனால், இராஜீய நிலையில் தீர்வுக்கான வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைன் அதிபர், 'நாம் வாழ போராட வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் இழந்து விட்டு போராட முடியாது. அங்கு எதுவும் இல்லை, மக்கள் இல்லை. அதனால்தான் இந்தப் போரை நிறுத்துவது முக்கியம் என்றார்.
அமைதிக்கான நம்பிக்கை
ஆறு வாரகாலப் போருக்குப் பிறகும் உக்ரைன் மக்கள் அமைதியை ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக ஜெலென்ஸ்கி கூறினார். சமாதானத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் அதிபர், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ளவில்லை. கீழ் மட்டத்தில் தான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR