வட கொரியா (North Korea) மர்மங்களால் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் தெரிந்து கொளவது மிகவும் கடினம். அதுவும் அதன் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) பற்றிய தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளியே வராது. வடகொரொய ஊடகங்கள், அதிபர் என்ன நினைக்கிறாரோ தைத் தான் பேச வேண்டும்,. மக்களும் அதிபர் எண்ணப்படியே நடக்க வேண்டும்.
கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிவதுண்டு. சென்ற ஆண்டு அவர் இறந்து விட்டார் என்று கூட செய்திகள் வந்தன. ஆனால், பின்னர் அவர் பொதுவில் தோன்றி அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்
கிம் ஜாங் உன் (Kim Jong Un) என்ற பெயரை கேட்டவுடன் நமது கண் முன் தோன்றுவது, அவரது உருண்டயான முகமும் குண்டான தோற்றமும் தான். மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அவரது தோற்றமே அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை உறுதிப் படுத்தும். அப்படிப்பட்ட கம்பீரமான தோற்றம் கொண்டவர் உடல் மெலிந்து, காணப்பட்டால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். பல நாட்களுக்கு பின் அவர் பொதுவில் தோன்றிய நிலையில், அவரை பல கால யாரும் பார்க்காத நிலையில், அவரது இந்த மெலிந்த தோற்றம் மக்கள் அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது, வட கொரியாவில் தற்போது இது தான் பேசு பொருளாக உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, கிம் ஏதோ ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றுகிறது.அவரது தோற்றத்தை பார்க்கும் போது, அவர் 10 முதல் 20 கிலோ எடையை இழந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ALSO READ | North Korea: POP இசை கேட்டால் மரண தண்டனை; கிம் ஜாங் உன் மக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அவரது உடல் எடை மிகவும் குறைந்துள்ளது என்பதை விளக்கு ஒரு குறுகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த கால தோற்றத்தையும், தற்போதுள்ள தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
Before-and-after videos show that North Korean leader Kim Jong Un noticeably lost weight. On Sunday, the country's state media offered a rare public segment on it, although the reason for the weight loss is unclear https://t.co/RhQEqL7dXH pic.twitter.com/H9szU1rA1W
— Reuters (@Reuters) June 27, 2021
கொரியாவின் சேனல் (KCTV), ஒரு நேர்காணலை ஒளிபரப்பி, கிம்மின் எடை இழப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன்னின் புகழை பாடும் ஒரு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. திடீர் எடை இழப்பு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வட கொரியாவில் தற்போது இது தான் பேசு பொருளாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR