மதரீதியான கலவரம்! ஹிந்து கோவில்களில் தாக்குதலை ஏற்படுத்திய கும்பல்!

வங்காளதேசத்தின் ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடந்தது.அங்குள்ள கொமில்லா என்ற நகரிலுள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2021, 05:21 PM IST
மதரீதியான கலவரம்! ஹிந்து கோவில்களில் தாக்குதலை ஏற்படுத்திய கும்பல்! title=

டாக்கா:  வங்காளதேசத்தின் ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடந்தது.அங்குள்ள கொமில்லா என்ற நகரிலுள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.  இந்த கடுமையான தாக்குதலினால் துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அனைத்தும் சேதமடைந்தது.மேலும் அந்த கும்பல் கோவில்களில் பூஜைகளில் ஈடுபட்டிருந்த பக்தர்களையும் தாக்கினர்.

கொமில்லா நகரில் நடந்ததை போலவே அந்நகருக்கு அருகேயுள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களிலும் உள்ள ஹிந்து கோவில்களின் மீதும் எதிர்பாராத விதமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டது.  இதையடுத்து நான்கு நகரங்களிலும் கலவரம் பெரும் பூகம்பமாக வெடித்தது.இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்த கும்பல் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

temple

ஒருவழியாக பாதுகாப்பு படையினர் போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த கலவரத்தில் 4 பேர் பலியாயினர்,மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.இத்தகைய பெரிய கலவரத்திற்கு காரணம் சமூக ஊடகங்களில் பரவிய சில தவறான தகவல் தான் என்று முதல் கட்ட விசாரணையில் மூலம் தெரியவந்துள்ளது.  இதுவரை நடந்த கலவரம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  இத்தகைய மத ரீதியான கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷேக்ஹசீனா தெரிவித்துள்ளார்.அவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ALSO READ ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, பலர் காயமடைந்தனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News