உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா?

SECRET POLICE STATIONS: உலகம் முழுவதும் பரவியிருக்கும் 'சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள்'! மொத்தம் 102 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 7, 2022, 09:40 AM IST
  • உலகம் முழுவதும் பரவியிருக்கும் 'சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள்
  • 102 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன
  • அதிருப்தி சீனர்களை குறிவைக்கும் சீனா
உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா? title=

ஒட்டாவா: உலகெங்கிலும் "காவல் சேவை மையங்கள்" என்ற பெயரில் சீனா ரகசிய காவல்துறையை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் குறைந்தது இரண்டு உட்பட, ஆவணப்படுத்தப்பட்ட "ரகசிய காவல் நிலையங்களின்" மொத்த எண்ணிக்கை இப்போது 102 ஆக இருப்பதாக, மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி CTV செய்தி தெரிவித்துள்ளது. உலகின் 53 நாடுகளில் 102 காவல் நிலையங்களை சீனா ரகசியமாக நடத்தி வருவதாக, திங்களன்று (2022 டிசம்பர் 5) வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ரோந்து மற்றும் அமைதியை ஏற்படுத்த` (Patrol and Persuade), என்று ஸ்பெயினில் உள்ள அரசு சாரா அமைப்பான Safeguard Defenders அமைப்பு தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 48 கூடுதல் ஆவணங்களை பதிவு செய்ய, சீன மக்கள் குடியரசு அதிகாரிகள், சீன போலீஸ் மற்றும் அரசு ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக இந்த அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளதாக, கனடாவின் CTV செய்தி வெளியிட்டுள்ளது. 

"செப்டம்பரில் அம்பலப்படுத்தப்பட்ட 54 நிலையங்களில் இது முதலிடத்தில் உள்ளது, இது 53 நாடுகளில் இருக்கும் சீனாவின் ரகசிய காவல் நிலையங்களில், ஆவணப்படுத்தப்பட்ட மையங்களின் மொத்த எண்ணிக்கையை 102 ஆகக் அதிகரித்துள்ளது. இந்த மையங்களை அமைக்கும் சீனாவின் இந்த திட்டத்திற்கு சில நாடுகளும்  ஒத்துழைத்துள்ளன," என்று தொலைக்காட்சி நெட்வொர்க், சேஃப்கார்ட் டிஃபென்டர் அமைப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் சீனப் பிரஜைகளை குறிவைத்து, குறிப்பாக சீனாவில் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் அவர்களை நாடு திரும்பும்படி வற்புறுத்துவதாக இந்த நிலையங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுவதாக செய்தி அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்

சீன நகரமான ஃபுஜோவில் இருந்து செயல்படும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று காவல் நிலையங்களுடன், வான்கூவரில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட மையங்களையும், வென்ஜோவிலிருந்து இயக்கப்படும் மற்றொரு மையத்தையும் கண்டறிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. திங்களன்று CTV நேஷனல் நியூஸ்க்கு அளித்த அறிக்கையில், RCMP (Royal Canadian Mounted Police) "காவல் நிலையங்கள்" என்று அழைக்கப்படும் குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கைகளை விசாரிப்பதாகக் கூறியது. இதுகுறித்து மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

டொராண்டோ பகுதியில் இயங்குவதாக கூறப்பட்ட சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள் தொடர்பான செய்திகள் வெளியானதற்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் CP24 க்கு இதேபோன்ற மேலும் பல மையங்கள் தொடர்பான தகவல்கள்  வந்துள்ளன.

இந்த செய்தியை மறுத்த சீன தூதரகம், சீனக் குடிமக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்க இந்த நிலையங்கள் உதவுவதாக தெரிவித்தது. மேலும், சீன குடிமக்களில் பலர் COVID-19 தொற்றுநோய் காரணமாக சீனாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு "உள்ளூர் தன்னார்வலர்கள்" உதவுவதாகவும் சீனா தெரிவித்தது.

ஆனால், புதிதாக ஆவணப்படுத்தப்பட்ட நிலையங்களில் பெரும்பாலானவை, கொரோனா தொற்றுநோய் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2016 இல் தொடங்கப்பட்டதாக Safeguard Defenders தெரிவித்ததாக CTV செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2021 மற்றும் ஜூலை 2022 க்கு இடையில் 230,000 தப்பியோடியவர்களை "தானாக முன்வந்து" சீனாவுக்குத் திரும்பும்படி சீன காவல்துறை "வற்புறுத்தியது" என்றும் சேஃப்கார்ட் டிஃபெண்டர்ஸ் கண்டறிந்துள்ளது.

சீனாவில் சந்தேக நபர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான உரிமையை மறுப்பது மற்றும் அவர்களின் உறவினர்களை தண்டிப்பது ஆகியவை சீனாவின் தந்திரங்கள் என்று கூறும் Safeguard Defenders, அமெரிக்காவில் வசிக்கும் சீன குடிமக்களை  சீனாவுக்குத் திரும்பும்படி துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் அமெரிக்க நீதித்துறை ஏழு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளதாகவும் CTV செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரகசிய காவல் நிலையங்களை உலகம் முழுவதும் வைத்துள்ள சீனா! கண்டிக்கும் கனடா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News