வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு நெருக்கடி என பாகிஸ்தான் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமைதியை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த நாடு மீண்டும் சதி செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. அமைதியைக் குலைக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான ஜிஹாதி நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் இப்போது மீண்டும் அதன் பழைய உத்தியைப் பின்பற்றி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடத் தொடங்கியுள்ளது.
இந்தியாவுடன் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் உள்ளது
அமெரிக்க (America) திங்க் டாங்க் குழுவான ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள், பல தசாப்தங்களாக ஜிஹாதிகள் மற்றும் காலிஸ்தானி குழுக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் தற்போது முடுக்கிவிட்டுள்ளது இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையளிக்கும் விஷயமாகும்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த கைதுகள் இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு இஸ்லாமாபாத் அளித்திருக்கும் ஆதரவை எடுத்துக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில், லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடத்தியதற்காக ஜஸ்விந்தர் சிங் முல்தானி ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.
ALSO READ | ISIS தலைவன் அமெரிக்க படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டார்: படைகளுக்கு பெரிய வெற்றி
SFJ மூலம் சதி
இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதிகள்தான் காரணம் என்று இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியதாகவும், முல்தானிதான் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது. முல்தானிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், எல்லையில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதில் அவன் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஹட்சன் இன்ஸ்டிடியூட் படி, ஜஸ்விந்தர் சிங் முல்தானி நீதிக்கான சீக்கிய இயக்கத்தின் (SFJ) முக்கிய உறுப்பினர் என்று கூறப்படுகிறது. SFJ இன் முக்கிய நபரான குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்த உண்மையை உறுதிப்படுத்தி, முல்தானியுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தினார்.
இந்திய-அமெரிக்க உறவுகளை கெடுக்கும் நோக்கம்
'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' அமைப்பை சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் பிரதமர், ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுக்கு, இந்தியாவுக்கு எதிராக தங்கள் ஆதரவைக் கோரி பொதுக் கடிதங்களை எழுதி வருகின்றனர். 'காலிஸ்தான் பிரச்சினை முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவிற்குள் காலிஸ்தான் தொடர்பான இந்தியா எதிர்ப்பு செயல்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.' என வல்லுனர்கள் கூறுகின்றனர். சீனாவின் முக்கிய நட்பு நாடாகக் கருதப்படும் பாகிஸ்தான் (Pakistan), இந்தியா-அமெரிக்க உறவுகளை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | WW3: மூன்றாம் உலகப் போர் அச்சம்! பாதுகாப்பு சுரங்கங்கள் ரெடி... பீதியில் அரச குடும்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR