பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!

பாகிஸ்தான் பொருளாதாரம் நீணட காலமாகவே மோசமான நிலையில் தான் உள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தானிற்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உடன் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு பாகிஸ்தானின் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2021, 07:41 PM IST
  • பாகிஸ்தான் பொருளாதாரம் நீணட காலமாகவே மோசமான நிலையில் தான் உள்ளது.
  • கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தானிற்கு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றூம் சவுதி அரேபியாவும் நல்லுறவில் இல்லை.
  • இஸ்லாமாபாத் தனது இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தூது அனுப்பி சமரசம் மேற்கொள்ள முயன்றது.
பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!! title=

அகல பாதாளத்திற்கு சென்று விட்ட பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்க, நாட்டின் மிகப்பெரிய பூங்காவை ₹50 ஆயிரம் கோடிக்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் (Pakistan) பொருளாதாரம் நீணட காலமாகவே மோசமான நிலையில் தான் உள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தானிற்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உடன் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு பாகிஸ்தானின் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்டில், சவுதி அரேபியா (Saudi Arabia) தன்னிடம் வாங்கிய  3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பித் தருமாறு பாகிஸ்தானிடம் கூறியது. உடனே, இஸ்லாமாபாத் தனது இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தூது அனுப்பி சமரசம் மேற்கொள்ள முயன்றது. இருப்பினும், சவூதி அரேபியா விட்டுக் கொடுப்பதாக இல்லை.

இந்நிலையில், அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில், 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள F-9 பூங்காவை பிரதமர் இம்ரான் கான் (Imran khan) அடமானம் வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாயை கடனாக வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதர்-இ-மில்லத் என்ற F-9 பூங்கா பாத்திமா ஜின்னாவின் நினைவாக பெயரிடப்பட்டது. இது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அழகான பசுமையான பூங்காக்களில்  ஒன்றூ என கூறப்படுகிறது.

பத்து நாட்களுக்கு முன்பு நிலுவையில் உள்ள விமான நிலைய குத்தகை கட்டணத்தை செலுத்த தவறியதால் மலேஷியாவில் வந்திறங்கிய பாகிஸ்தான் போயிங் 777 விமானத்தை தடுத்து நிறுத்தி அதனை மலேசியா அரசு கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது

ALSO READ | 170 பயணிகளுடன் பாகிஸ்தானின் PIA விமானம் கோலாலம்பூரில் பறிமுதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News