இஸ்லாமாபாத் / பெய்ஜிங்: இந்தியாவிற்கு எதிராக நேபாளத்தை (Nepal) தூண்டியதை போலவே, பூட்டானை தூண்டடும் சீனாவின் (China) முயற்சி தோல்வி அடைந்தது. அதனால், பெய்ஜிங் இப்போது தனது 'அடிமை' பாகிஸ்தானை (Pakistan) இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) வியாழக்கிழமை பூட்டானின் பிரதமர் லொட்டே ஷெரிங் (Lotay Tshering) உடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் பூட்டான் (Bhutan) பிரதமருடன் பேசுவது இதுவே முதல் முறை. அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானின் நோக்கம் என்ற கேள்வி எழுகிறது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பூட்டான் எடுத்த நடவடிக்கைகளையும் இம்ரான் கான் பாராட்டினார். இது மட்டுமல்லாமல், பூட்டான் பிரதமரை பாகிஸ்தான் (Pakistan) பயணம் மேற்கொள்ள வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, பூட்டானுடனான பாகிஸ்தானின் நெருங்கிய உறவின் முக்கியத்துவத்தை கான் கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் வழக்கமான இருதரப்பு உறவுகள், வளரும் நாடுகளில் கொரோனாவை (Corona virus) கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பூட்டானை இந்தியாவுக்கு எதிராக தூண்டும், சீனாவின் சதி முயற்சி தோல்வியடைந்த நிலையில், பூட்டான் பிரதமரிடம் இம்ரான் கான் பேசியுள்ளார். இம்ரான் கான் தனது முதலாளி சீனாவின் கட்டளைகளை பின்பற்றுகிறார் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
ALSO READ | விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு...!!!
சில சமயங்களில், எல்லை தகராறு குறித்த அச்சத்தைக் காட்டி, பொருளாதார உறவுகளை ஈர்ப்பதன் மூலம் பூட்டானை இந்தியாவுக்கு எதிராகத் திருப்ப சீனா முயன்றது. இருப்பினும், இந்த முயற்சியில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியுற்றார், ஏனென்றால் பூட்டான் இந்தியாவுடன் நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறது. பூட்டானின் வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.
பூட்டானிய தலைமை சீனாவின் நோக்கம் மற்றும் சதி வேலைகளை நன்கு அறிந்துள்ளது. இந்தியா தனது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒன்றாக நிற்பதைப் போல், சீனாவிடன் எதிர்பார்க்க முடியாது என்பதையும் பூட்டான் நன்கு அறியும். எனவே, சீனா கொடுக்கும் சலுகைகளை, நிராகரித்து புதுடெல்லிக்கு நெருக்கமாக இருக்கவே விரும்புகிறது.
ALSO READ | நூடுல் சூப் குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR