பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீபின் ஜாமீன் மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து National Accountability Bureau (NAB) அவரை கைது செய்தது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) (PML-N) கட்சியின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பில்லியன் ரூபாய் அளவில் (41.9 மில்லியன் அமெரிக்க டாலர்) பண மோசடி செய்ததாக பாகிஸ்தான் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஷெபாஸ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ட்வீட்டர் செய்தியில் விளக்கமளித்த பி.எம்.எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ், "எந்த தவறும் செய்யாதீர்கள். தனது சகோதரருக்கு எதிராக செயல்பட சொன்னதை ஏற்க மறுத்ததால் மட்டுமே ஷெபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். தனது சகோதரருக்கு எதிராக நிற்பதை விட சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது உசிதம் என்று அவர் முடிவெடுத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்ஹான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷெபாஸ் ஷெரீப், 2008 முதல் 2018 வரை பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
உள்துறை மற்றும் பொறுப்புக்கூறல் விஷயங்களில் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகராக இருக்கும் ஷாஜாத் அக்பர் (Shahzad Akbar) இந்த விவகாரம் தொடர்பாக இவ்வாறு கூறுவதாக டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஷெபாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹம்சா மற்றும் சல்மான் ஆகியோர் போலி கணக்குகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டனர், ஆனால் தங்கள் தொழிலில் அவர் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்று மறுக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்கள் மற்றும் Ramazan Sugar Mills மூலம் சுமார் 9.5 பில்லியன் டாலர் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான சம்பளம் ஆயிரக்கணக்கான ரூபாயாக இருந்த நிலையில், வங்கிக் கணக்குகள் மூலம் பில்லியன்கள் கணக்கான தொகைகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.
Shahid K Abbasi argument about responsibility of a Prime minister in sugar subsidy exposed tonight.Sir as former PM plz show grace n admit your follies/weaknesses n not attack @ImranKhanPTI just for your biases and not on merit @PTIofficial @GFarooqi pic.twitter.com/pxIMt48FAF
— Mirza Shahzad Akbar (@ShazadAkbar) April 8, 2020
2008 முதல் 2018 வரை தனது வாரிசுகளால் நடத்தப்பட்ட பணமோசடி விஷயம் குறித்து ஷாபாஸ் விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று அக்பர் கூறுகிறார்.
Also Read | பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்கும் பாகிஸ்தான் அரசின் நோக்கம் என்ன?