ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு; 25 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் மேற்கு காபூலில், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை (மே 8) வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2021, 11:33 PM IST
  • தீவிர சன்னி முஸ்லீம் குழு ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது.
  • முஹம்மது அலி ஜின்னா மருத்துவமனைக்கு வெளியே, மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதையும் காணலாம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு;  25 பேர் பலி title=

ஆஃப்கானிஸ்தானில் மேற்கு காபூலில், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை (மே 8) வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்று ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தனர். தலிபான்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ள தாலிபான் அமைப்பு, இந்த தாக்குதலுக்கான பொறுப்பையும் மறுத்தனர்.

ஷியா  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள டாஷ்தே-இ-பார்ச்சியில், சையத் அல்-ஷாஹ்தா பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தீவிர சன்னி முஸ்லீம் குழு ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது.

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் படங்களில், கட்டிடங்களுக்கு மேலே புகை வருவதை காணலாம். முஹம்மது அலி ஜின்னா மருத்துவமனைக்கு வெளியே, மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதையும் காணலாம்.

ALSO READ | கொரோனாவால் ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு; ஒலிப்பிக் போட்டிகளின் நிலை என்ன

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, மேலும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் செய்தியில் பேசியதாவது, இதுபோன்ற கொடூரமான குற்றத்திற்கு இஸ்லாமிக் ஸ்டேட் குழு  மட்டுமே  காரணமாக இருக்க முடியும் என்றார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் தாக்குதல்களைத் முறியடிக்க அரசாங்கப் படைகள் எதிர் தாக்குதலைத் தொடங்கியதால்,  பயங்கரவாதிகள் தரப்பில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தன என ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

சிவில் சமூகத் தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆப்கானிய தொழில் வல்லுநர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தான் காரணம் எனவும் தலிபான் மற்றும் ஆப்கானிய அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில், மீதமுள்ள 2,500 முதல் 3,500 அமெரிக்க துருப்புக்கள் அதிகாரப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என கூறப்படுகிறது.

ALSO READ | China Rocket: சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News