வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அவதூறான கூற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு எழுத்துரு தோன்றியதையடுத்து, அதை எழுதிய நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் வட கொரிய அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
அந்த நபரைக் கண்டுபிடிக்க, வட கொரிய (North Korea) அதிகாரிகள் பியோங்யாங்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கையெழுத்து மாதிரிகளைக் கோரி வருகின்றனர்.
பியாங்சோன் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில், "கிம் ஜாங் உன், யு சன் ஒஃப் அ பி****. உன்னால் மக்கள் பட்டினியால் செத்து மடிகிறார்கள்" என எழுதி இருந்தது. இந்த செய்தி டிசம்பர் 22 அன்று வெளிவந்ததாக செய்தித் தளமான டெய்லி என்.கே. தெரிவித்துள்ளது.
ALSO READ | வட கொரியாவின் Kim Jong Un-க்கு blue jeans மீதுள்ள வெறுப்பின் காரணம் என்ன தெரியுமா?
உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த எழுத்துருவை சுவர்களில் இருந்து துடைத்து அகற்றினர். தற்போது, இதை எழுதிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த எழுத்துரு எழுதப்பட்ட சுவருக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வீடு வீடாகச் செல்லும் அதிகாரிகள் அங்குள்ள மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். இந்த எழுத்துரு எழுதப்பட்ட நாளில் அங்கிருந்த மக்களின் நடமாட்டம் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
பஞ்சம் காரணமாக வட கொரியா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்திய வெள்ளம் மற்றும் தொற்றுநோய் (Pandemic) காரணமாக சீனாவுடனான வடக்கு எல்லை மூடப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் நிலை இன்னும் மோசமாகிவிட்டது.
இந்த நேரத்தில், வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியும் தலைநகரில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தி வருகிறது.
மேலும் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடனும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் (Kim Jong Un) உன் பற்றி அவ்வப்போது பல வினோத விஷங்களை நாம் கேள்விப்படுகிறோம். வட கொரியாவில் நடக்கும் பல நிகழ்வுகளும் மிக வினோதமாகவே உள்ளன. தற்போதைய இந்த நிகழ்வும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
ALSO READ | வட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR