இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு யாரையும் தேர்வு செய்யவில்லை என 'ஸ்வீடிஷ் அகாடமி' நிறுவனம் தெரிவித்தள்ளது..!
இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் 'ஸ்வீடிஷ் அகாடமி' பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளதால் இந்த ஆண்டுக்கான விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
'ஸ்வீடிஷ் அகாடமி' தனது உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டினை கையாண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய உறுப்பினருடன் சேர்த்து மொத்தம் ஐந்து உறுப்பினர்களையும், அதன் தலைவரும் பதவி விலகினர்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டே தேர்வு செய்யப்போவதாக 'ஸ்வீடிஷ் அகாடமி' அறிவித்துள்ளது. 1901-ம் ஆண்டு முதல் முறையாக இந்தப் பரிசு வழங்கப்பட்டதில் இருந்து இந்தப் பரிசு தொடர்பாக எழுந்துள்ள மிகப்பெரிய சர்ச்சை இது. மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அகாடமி தெரிவித்துள்ளது.
அகாடமியின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் பரிசு வழக்கம் போல் அறிவிக்கப்பட வேண்டும் என்று சில உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால், சிலர் பரிசு வழங்கும் நிலையில் தற்போது அகாடமியின் நிலையானது இல்லை என்று கூறியுள்ளனர்.
உலகப் போர்கள் நடந்துவந்த காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது தவிர, 1935-ம் ஆண்டு தகுதியான யாரும் இல்லை என்பதால் பரிசு அறிவிக்கப்படவில்லை.