Miracle! விபத்தில் தனியாய் கழன்ற தலையை உடலுடன் பொருத்திய மருத்துவ அதிசயம்

சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, உடலில் இருந்து தனியாய் கழன்ற தலையை உடற்பகுதியில் வெற்றிகரமாக இணைத்த இஸ்ரேலில் உள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2023, 10:00 PM IST
  • சிக்கலான அறுவை சிகிச்சை
  • தலையை உடலுடன் பொருத்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள்
  • விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு மறுஜென்மம்
Miracle! விபத்தில் தனியாய் கழன்ற தலையை உடலுடன் பொருத்திய மருத்துவ அதிசயம் title=

இஸ்ரேலில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, உடலில் இருந்து தனியாய் கழன்ற தலையை உடற்பகுதியில் வெற்றிகரமாக இணைத்தனர். சாலை விபத்துக்குப் பிறகு 12 வயது சிறுவனின் மண்டை ஓடு மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் நிறுவுவதற்கு புதிய தட்டுகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திய மருத்துவ சாதனை, அதிசயமான மீட்பு என்று கருதப்படுகிறது.

மிகவும் அரிதான ஒரு நிகழ்வில், இஸ்ரேலில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு சோகமான சாலை விபத்தில் சிக்கிய சிறுவனின் தலையை அவனது உடற்பகுதியில் மீண்டும் இணைத்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மேற்குக் கரையைச் சேர்ந்த 12 வயது பாலஸ்தீன சிறுவன் சுலைமான் ஹாசன் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். சுலமான் ஹாசனின் மண்டை ஓடு முதுகெலும்பின் உள்ள மேல் எலும்பிலிருந்து பிரிக்கப்பட்டதால், 'தலையின் உட்புறம் துண்டிக்கப்பட்டது' (internal decapitation).

விபத்து எப்படி நிகழ்ந்தது?

சுலைமான் ஹசன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரும், பைக்கும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. சிறுவன் ஹடாசா மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தலை "கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக எமர்ஜென்சி பிரிவில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பல மணி நேரம் ஆகும் என்று மருத்துவர்கள் கணித்தனர். இந்த அறுவைசிகிச்சை மிகவும் சிக்கலானது என்று நிபுணர்கள் கருதினார்கள். 'புதிய தட்டுகள் மற்றும் சேதமடைந்த பகுதியில் பொருத்துதல்கள்'(new plates and fixations) பயன்படுத்தப்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க |  பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் - மோடிக்கு கோரிக்கை வைத்த கணவன்!

மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், சிறுவன் சுலைமான் ஹசன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 50 சதவீதம் மட்டுமே என்றும், அவர் குணமடைவது சிரமமானது என்றும் மருத்துவர்கள் கூறிய நிலையில், தற்போது சிறுவன் உயிர் பிழைத்தது மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பூரண குணமடைந்த சுலைமான் ஹசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரே அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,

சுலைமான் ஹசனுக்கு இதுவரை நரம்பியல் குறைபாடுகள் அல்லது உணர்ச்சி அல்லது செயலிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மருத்துவ செயல்முறை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவமனையின் மருத்துவ பேராசிரியர், பெரிய இரத்த நாளங்கள் அப்படியே இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை சாத்தியம் என்றும், அந்தவிதத்தில் ஹசன் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நீ எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தா எனக்கென்ன? 19 அடி மலைப்பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News