அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!

கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்டிகாவின் வெப்ப நிலை  3 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது

Last Updated : Jul 22, 2020, 04:53 PM IST
  • மீத்தேன் கசிவு, 2011 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
  • மீத்தேன் வெளியீட்டிற்கும். அதை நுண்ணியிர்கள் உட்கொள்ளும் அளவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு, கடலுக்குள் கசிவு அதிகரிப்பதை குறிக்கிறது
  • COVID-19 தொற்றுநோய் காரணமாக இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆராய்ச்சிகளும் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!! title=

அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்டிகாவின் வெப்ப நிலை  3 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது என்று முன்னதாக உலக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. மேலும் உலக வெப்பமாதல் காரணமாக அதன் மேற்கு கடற்கரையில் இருக்கும் 87% பனிப்பாறைகள் இதுவரை உருகியுள்ளன  என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகும் அளவு கவலைப்படத்தக்க அளவில் அதிமாகியுள்ளது எனவும் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.

இந்நிலையில்,  விஞ்ஞானிகள் அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது உலகிற்கு நல்ல செய்தி அல்ல என அவர்கள் எச்சரிக்கின்றனர்

ALSO READ | COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump

மீத்தேன் ஒரு தீங்கு விளைவிக்கும் வாயு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு காரணமான வாயுக்களில் முக்கியமான ஒன்றாகும்.

கசிவு ஏன் நடந்தது, அல்லது அதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அண்டார்டிகாவில் உள்ள கடற்பரப்பின் கீழ் ஒரு பெரிய அளவு மீத்தேன் உள்ள நிலையில், இந்த கசிவு கடல்களின் வெப்பமயமாதலின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், மீதேன் கசிவு கண்டுபிடிக்கப்பட்ட இடமான ரோஸ் கடல் (Ross Sea), என்ற பகுதியில் தற்போது மீத்தேன் வெளியேற்றும் அளவுக்கு வெப்பமடையவில்லை என்பது தான்.

2011 ஆம் ஆண்டில் முதன்முதலில் மீத்தேன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து,  2016 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

ஆய்வில் பங்கேற்ற மிக முக்கிய ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரூ தர்பர் தி கார்டியன் என்ற பத்திரிக்கையிடம் பேசுகையில், கசிவு மட்டும் கவலைக்குரிய விஷயம் அல்ல, அதில்  நுண்ணுயிரிகள் எதுவும் காணப்படவில்லை என்பது அதை விட இன்னும் கவலைப்படக் கூடிய விஷயம் என கூறினார்.

"இது ஒரு நல்ல செய்தி அல்ல", என்று அவர் கூறினார்.

பொதுவாக புவி வெப்பமடைதலின் நேரடி விளைவாக,  இந்த தீங்கு விளைவிக்கும் வாயுவான மீத்தேன், நீருக்கடியில் இருந்து வெளியேறுவது கடல் மற்றும் கடல் வாழ்வில் நீண்டகால எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

மீத்தேன் வெளியீட்டிற்கும். அதை  நுண்ணியிர்கள் உட்கொள்ளும் அளவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு,  கடலுக்குள் கசிவு அதிகரிப்பதை குறிக்கிறது. இது கடற்பரப்பின் ஆழமான உட்புறங்களில் அமைந்துள்ள சிதைந்த கடல் பாசியிலிருந்தும் வரக்கூடும். ஆனால் வாயுவை உட்கொள்ளும் நுண்ணுயிரிகள் அதிகம் இல்லாத நிலையில், வாயு பெரும்பாலும் வளிமண்டலத்தில் கசிகிறது.

ALSO READ | சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் நடக்கும் IAF கமாண்டர்கள் நிலையிலான மாநாடு

இது முதல் மீத்தேன் கசிவு அல்ல. 2014 ஆம் ஆண்டில், தென் ஜார்ஜியாவிலும் இதேபோன்ற கசிவு காணப்பட்டது. இது தெற்குப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கசிவாக அமைந்தது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆராய்ச்சிகளும்  தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

Trending News