மின் தடையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. ஸ்தம்பித்து போனது மக்களின் இயல்பு வாழ்க்கை..!!

மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2021, 11:56 AM IST
  • மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
  • பல நகரங்களில் சனி இரவு 11.41 மணியளவில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி தவித்து வருகிறது.
  • மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மின் தடையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. ஸ்தம்பித்து போனது மக்களின் இயல்பு வாழ்க்கை..!! title=

பாகிஸ்தானின் மின்பகிர்மான கட்டமைப்பில்  ஏற்பட்ட மிகப்பெரிய கோளாறு காரணமாக, அந்நாட்டில் உள்ள பல நகரங்கள் நேற்று இரவு முதல் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது வரை நிலைமை சரியாகவில்லை. இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி  உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நேற்று இரவு முதல் இருளில் மூழ்கி தவிக்கின்றன. மருத்துமனையில் வெண்டிலேட்டரில் உள்ளவர்களுக்கு பவர் சப்ளை இல்லாததால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது

மின் தடை குறித்த தனது ட்விட்டர் செய்தியில், இஸ்லாமாபாத் (Islamabad) மின்வாரிய துணை ஆணையர் ஹம்ஸா சப்காத் “ தேசிய அளவில் மின்பகிர்மான அமைப்பில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தால், பல நகரங்களில்  மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு சில மணிநேரம் ஆகலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

“ தேசிய மின்பகிர்மான அமைப்பில்,  அலைவரிசை அளவு திடீரென 50 என்ற அளவிலிருந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. இதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்” என மின்துறை அமைச்சர் உமர் அயுப் கான் தெரிவித்துள்ளார்

தெற்கு பாகிஸ்தானில் (Pakistan)  உள்ள பல நகரங்களில் சனி இரவு 11.41 மணியளவில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி தவித்து வருகிறது.

மின் பகிர்மான அமைப்பில் ஏற்பட்ட பழுது பார்க்கப்பட்டு நிலைமை சீராகும் வரை மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். மின்சார பகிர்மானத்தில் பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்று அதிகாரிகள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ALSO READ | பிரிட்டிஷ் அரசு உளவு சட்டத்தில் திருத்தம்.. இனி குழந்தைகளும் James Bond ஆகலாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News