Malaysia Landslide : நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி!

Malaysia Landslide : மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 16, 2022, 09:04 AM IST
  • மொத்தம் 71 பேர் நிலச்சரிவில் சிக்கியிருந்தனர்.
  • 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
  • 8 பேர் தற்போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Malaysia Landslide : நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி! title=

Malaysia Landslide : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பககுயான உள்ள சிலாங்கூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான அங்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள  பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலச்சரிவில் மொத்தம் 79 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதில், 51 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலச்சரிவு, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து முகாமிட்டிருக்கும் இடம் வரை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால், சுமார் ஒரு ஏக்கர் நிலம் மண்ணால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | நாட்டை விட்டு ஓடிய கத்தார் இளவரசி... காரணம் என்ன!

கோலாலம்பூரின் வடக்கே உள்ள படாங் காளி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு புறநகர் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதி ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது.

சிலாங்கூர், அந்நாட்டின் மிகவும் செல்வச் செழிப்புள்ள பகுதியாகும். இதற்கு முன்பும் நிலச்சரிவுகள் அங்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் காடு மற்றும் நிலத்தை ஆக்கிரமிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. ஆனால் ஒரே இரவில் கடுமையான மழையோ அல்லது நிலநடுக்கமோ பதிவாகவில்லை. ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர். 

மேலும் படிக்க | Cat Bite : பூனை கடித்தால் வந்த ஆபத்து... கதரும் குடும்பம் - கவனமா இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News