World Temperature: ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை நிறுவனத்தின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் இதுவரை வரலாற்றில் இல்லாத வெப்பமானதாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 2019இன் வெப்ப சாதனையை மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் மாதத்தில் வெப்பநிலை 1991ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடையில் அதே மாதத்தின் சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியில் உள்ள WWFஇன் காலநிலை மற்றும் எரிசக்தி பிரிவின் தலைவரான மரியக்ராசியா மிதுல்லா இதுகுறித்து கூறுகையில்,'முன்னர் விதிவிலக்கானதாகக் கருதப்பட்ட காலநிலை நிகழ்வுகள் இப்போது தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த போக்கு. இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன" என்றார்.
இதனால், நாம் அதிக வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும், கடல் மட்டம் படிப்படியாக உயரும் என்றும் மிதுல்லா மேலும் கூறினார். இது உலக பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மிதுல்லா கூறினார். பசுமை இல்ல வாயுக்களின் படிப்படியான அதிகரிப்புக்கு அப்பாற்பட்ட காரணிகளின் சங்கமத்தின் காரணமாக இந்த ஆண்டு அதிக வெப்பநிலை ஏற்படுகிறது, இதில் எல் நினோ வானிலை முறை தோன்றியுள்ளது.
மேலும் படிக்க | ராட்சத ராட்டினத்தில் பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய 8 பேர்..! வைரல் வீடியோ..!
நடப்பது எல் நினோ விளைவு
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு துருவப் பகுதிகளில் கடலின் பெரும்பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும் போது, அது எல் நினோ விளைவு என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயரும். இந்த கூடுதல் வெப்பநிலை காரணமாக, வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. எல் நினோ தாக்கத்தின் ஆண்டுகளில் இந்த வெப்பம் காரணமாக, பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட Grantham இன்ஸ்டிட்யூட்டில் காலநிலை அறிவியல் பேராசிரியர் ஜோரி ரோஜெல்ஜ் கூறுகையில்,"எல் நினோவின் காலநிலை மாற்ற விளைவுகள் தீவிரமடைவதால், அடுத்த சில மாதங்களில் அதிக உலகளாவிய வெப்பநிலை பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், எல் நினோ இல்லாவிட்டாலும், வெப்பநிலை போக்கு மிகவும் கவலையளிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
உலக சராசரி வெப்பநிலை
ஜூலை 3ஆம் தேதி உலக சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையில், அந்நாள் தான் உலகின் மிக வெப்பமான நாளாக அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் முன்கணிப்பு மையம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை நிறுவனத்தின் இந்தச் தகவல் வெளிவந்துள்ளது.
பின்னர், ஜூலை 4ஆம் தேதி, அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் இந்த சாதனையை மீண்டும் முறியடித்துள்ளனர். ஜூலை 6ஆம் தேதி அன்று கோப்பர்நிக்கஸ் அறிக்கையின் முதற்கட்ட தகவல்கள் இதை உறுதிப்படுத்தியது, அன்றைய உலக சராசரி வெப்பநிலை 17.03 டிகிரி செல்சியஸ்.
மேலும் படிக்க | மனைவியின் மூளையை தின்று... மண்டை ஓட்டை ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திய மனித மிருகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ