Japan Interese Rate Hike: ஜப்பான் நாட்டின் பொருளாதார நிலை (Japan Economy) , வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இருப்பதால், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் (World Third Largest Economy) என்ற பெருமையை இழந்தது. இந்நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, ஜப்பான் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பேங்க் ஆப் ஜப்பான் நிதி கொள்கை கூட்டத்திற்கு பிறகு, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2007ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மந்தமாகி வரும் பொருளாதாரத்தை அதிகரிக்க பேங்க் ஆப் ஜப்பான் எடுத்த முக்கிய நடவடிக்கையில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் காலமாக கடைபிடித்து வந்த எதிர்மறை வட்டி விகிதங்களை அதிகரிப்பதாகவும், மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எதிர்மறை வட்டி விகித முறை நீக்கம்
ஜப்பான் வங்கி தனது நிதி கொள்கை குறித்த கூட்டத்தில், குறுகிய கால வட்டி விகிதத்தை மைனஸ் -0.1 %என்ற அளவில் இருந்து, 0.1% என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக எடுத்துள்ள முடிவை அடுத்து, தற்போது முதல்முறையாக வட்டி விகிதம் பூஜ்ஜியத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்மறை வட்டி விகிதம் என்றால் என்ன
எதிர்மறை வட்டி விகிதம் என்றால், பணப்புழக்கம் நன்றாக இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கும் போது, ஒரு நாட்டின் மத்திய வங்கியும், நிதி கட்டுப்பாட்டு அமைப்பும், எதிர்மறை வட்டி விகித முறையை பயன்படுத்துகின்றனர். இதன்படி கடன் வழங்குபவர்களுக்கு வட்டி செலுத்தப்படுத்துவதற்கு பதிலாக, கடன் வாங்குபவர்களுக்கு வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை ஜப்பானில் மட்டும் இன்றி சில ஐரோப்பிய பொருளாதரங்களிலும் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் செலவு செய்யவும் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையிலும், ஜப்பானில் உள்ள வங்கிகள் கடன் வாங்குவதற்கான செலவு எப்போதுமே குறைவாக வைத்திருக்கும்.
ஜப்பானின் பணவீக்கம்
ஜப்பானின் மத்திய வாங்கி பணவீக்க இலக்கை இரண்டு சதவீதமாக நிர்ணயித்துள்ளது. பேங்க் ஆப் ஜப்பானின் தலைவர் கசுவோ உடே, பணவீக்க விகிதம் இரண்டு சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால், வங்கி அதன் எதிர்மறை வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்யும் என்று கூறியிருந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் ஜப்பானின் பணவீக்க விகிதம் 2.2% என்று அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு
GDP என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்ற சரிவு காரணமாக, ஒரு மாத காலத்திற்கு முன்பு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்று அந்தஸ்தை ஜப்பான் நாடு இழந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் மூன்றாவது முக்கிய பொருளாதாரம் ஆக ஜெர்மனி அந்த இடத்தில் பிடித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் இன்றி, டாலருக்கு நிகரான மதிப்பை, ஜப்பான் நாணயமான யென் இழந்ததால் நிலைமை மேலும் மோசமாகியது. ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 ட்ரில்லியன் டாலர் என்று அளவை எட்டி இருந்தது. அதேசமயம் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 4.5 ட்ரில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடின் 88% வாக்குகளுடன்.. 5வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ