IQAir: இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல

Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2023, 08:49 AM IST
  • இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருகிறது
  • தொழிற்சாலை இல்லாவிட்டாலும் அதிகரிக்கும் காற்று மாசு
  • கங்கை சமவெளிகள் - பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு
IQAir: இந்தியாவில் அதிகரிக்கும்  காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல title=

நியூடெல்லி: அண்மையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ஒன்றில், உலகின் 14 மாசுபட்ட நகரங்கள் இந்தியாவில் உள்ளன. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மிகவும் மாசுபட்ட 14 நகரங்களில் டெல்லி மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும். சல்பேட், நைட்ரேட், கறுப்பு கார்பன் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற மாசுபடுத்திகள் இந்தியாவில் மாசுபாட்டின் முக்கியமான காரணங்களாக இருக்கின்றான.

மாசுபட்ட காற்றின் விளைவாக ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான நோய்களைத் தவிர்க்க, குறிப்பாக குழந்தைகள் அல்லது வயதானவர்கள் வீட்டில் இருந்தால், நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை அண்மைத் தகவல்கள் உணர்த்துகின்றன.  

உலகில் 10 பேரில் 9 பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. வீடு மற்றும் வெளிப்புறம் என ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டின் விளைவாக தொற்று அல்லாத நோய்களும் (NCDs) ஏற்படுகின்றன என்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பக்கவாதம், இதய நோய்கள், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் பல இறப்புகளுக்கு வழிவகுக்கிறது. காற்று மாசு அளவு PM10 என்ற உச்சத்தை எட்டும்போது, ​​காற்றின் தரம் மிகவும் குறைந்துவிடுகிறது.

மேலும் படிக்க | Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! 

இந்தியாவில் காற்றின் தர நிலை  
துரதிர்ஷ்டவசமாக, வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி, கான்பூர் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களில் மாசுபாடு அதிகமாக உள்ளது. இந்தப் பட்டியலில், வாரணாசி, கயா, ஸ்ரீநகர் மற்றும் முசாபர்பூர் போன்ற நகரங்களும் சேர்ந்துள்ளது கவலைகளை அதிகரிக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், PM 2.5 அளவுகள் மிக அதிகமாக இருந்தது என்றாலும்,  இந்த நகரங்களில் தொழிற்சாலைகள் அல்லது மாசுபாட்டின் பிற ஆதாரங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கங்கை சமவெளி மற்றும் பள்ளத்தாக்கில் காற்று மாசு

உண்மையில், கங்கை சமவெளிகளும், பள்ளத்தாக்குகளும், காற்று மாசுபாட்டின் முக்கிய இடமாக வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்குகாரணம், பள்ளத்தாக்கில் உள்ள காற்று மாசுக்கள் வெகுதூரம் சிதறாமல் மாசு அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.

மாசு அதிகரிப்பும் ஆரோக்கியத்தின் மீதான தாக்கமும்
நாம் பொதுவெளியில் இருக்கும்போது மட்டுமா காற்று மாசு (Air Pollution) அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? வீட்டிற்குள் இருக்கும்போதும் காற்றின் தரம் நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரியவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு அவர்களை மாசுபாட்டிலிருந்து ஓரளவு பாதுகாக்க முடியும் என்றாலும், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | ரெடி டு ஈட் மற்றும் துரித உணவுகள் விற்பனை தொடர்பான புதிய விதிகளை கொண்டு வருகிறது FSSAI

காற்று மாசினால் யாருக்கு அதிக ஆபத்து?

காற்று மாசினால் குழந்தைகளின் வளர்ச்சியடையாத சுவாச அமைப்பு மோசமாக பாதிக்கப்படுகிறது, இது ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. காற்று மாசுபாடு குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரின் ஆயுளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் அதிக மாசுப்பட்ட நகரங்கள்

சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட 2022 உலகக் காற்றுத் தர அறிக்கையின்படி, 2022 இல் மக்கள்தொகை-எடை சராசரி PM2.5 அளவு 53.3 μg/m3 கொண்ட 131 நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்தது. சமீபத்திய அறிக்கையின்படி, பல இந்திய நகரங்கள் முதல் 50 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்கள் எவை மற்றும் மாசுபாட்டிற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகள் என்ன என்பதை பார்ப்போம்.

பிவாடி, ராஜஸ்தான்

சுமார் 104,883 மக்கள்தொகையுடன், பிவாடி, PM2.5: 92.7μg/m³, இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாகும். இது உலகின் மூன்றாவது மாசுபட்ட நகரமாகும். பிவாடி நகரின் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் தொழில்துறை மாசுபாடுகள் ஆகும்.

தலைநகர் சுற்றுவட்டாரப் பகுதிகள் (NCR)

டெல்லி, (PM2.5: 92.6μg/m³) சுமார் 3 கோடி மக்கள்தொகையுடன், இந்தியாவின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக உள்ளது.  வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு, பயோமாஸ் எரிப்பு மற்றும் தூசி ஆகியவை டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள்.

தர்பங்கா, பீகார்
விவசாய எரிப்பு மற்றும் வாகனங்களின் உமிழ்வு ஆகியவை நகரின் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள். தர்பங்கா, PM2.5: 90.3μg/m³ உடன், இந்தியாவின் மூன்றாவது மாசுபட்ட நகரமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அசோபூர், பீகார்
PM2.5: 90.2μg/m³ உடன், அசோபூர் இந்தியாவின் நான்காவது மிகவும் மாசுபட்ட நகரமாகும். இந்த பட்டியலில் இடம்பிடித்ததற்கு எரிபொருள் எரிப்பு முக்கிய காரணமாகும்.

நியூடெல்லி
சமீபத்திய அறிக்கைகளின்படி, டெல்லி (PM2.5: 89.1μg/m³) இந்தியாவின் ஐந்தாவது மாசுபட்ட நகரமாக உள்ளது. வாகன உமிழ்வுகள், பயோமாஸ் எரிப்பு மற்றும் தூசி ஆகியவை நகரின் மாசுபாட்டில் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கிறது.

மேலும் படிக்க | உக்ரைனின் மிகப் பெரிய அணையை தகர்த்த ரஷ்யா... அழிவின் விளிம்பில் உக்ரைன்?

பாட்னா, பீகார்
அதிக மாசுபட்ட இந்திய நகரங்களின் முதல் 10 பட்டியலில் பீகாரைச் சேர்ந்த மற்றொரு நகரம் உள்ளது. காற்றின் தரம் குறைந்து வருவதால் செய்திகளில் இடம்பிடித்துள்ள பாட்னாவில் 2.05 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

காசியாபாத், உத்தரப் பிரதேசம்
காசியாபாத், PM2.5: 88.6μg/m³ உடன், இந்தியாவின் ஏழாவது மாசுபட்ட நகரமாகும். தொழில்துறை உமிழ்வுகள் நகரின் மாசுபாட்டிற்கு பங்களித்தன.

தருஹேரா, ஹரியானா
தாருஹேரா, PM2.5: 87.8μg/m³, மற்றும் வெறும் 46,677 மக்கள்தொகை கொண்ட தாருஹேரா, இந்தியாவின் எட்டாவது மாசுபட்ட நகரமாகும்.

சாப்ரா, பீகார்
சாப்ரா, PM2.5: 85.9μg/m³ உடன், இந்தியாவின் ஒன்பதாவது மாசுபட்ட நகரமாகும். காற்று மாசுபாட்டிற்கு உள்நாட்டு எரிபொருள் எரிப்பு மற்றும் தூசி முக்கிய பங்களிப்பாகும்.

முசாபர்நகர், உத்தரப்பிரதேசம் 
விவசாய எச்சங்களை எரிப்பதே நகரத்தின் மாசுபாட்டின் முக்கிய காரணியாகும். PM2.5: 85.5μg/m³ உடன், முசாபர்நகர் இந்தியாவின் பத்தாவது மாசுபட்ட நகரமாகும்.

மேலும் படிக்க | Old Pension அதிரடி அப்டேட்: இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், குஷியில் ஊழியர்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News