இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 5, 2019, 10:51 AM IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி title=

வாஷிங்டன்: 2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது. 

கடந்த நிதியாண்டு போல, இந்த நிதியாண்டும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதே அளவில் இருக்கும் உலக வங்கி கணித்துள்ளது. அதுக்குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறியதாவது, 

வட்டி விகிதம் தளர்வு மற்றும் பணவீக்கம் குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும். கடந்த நிதியாண்டில் (2018-19) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆகா இருந்தது. 2019 ஏப்ரல மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக தான் இருக்கும். அதில் மாற்றம் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

Trending News