Artefacts: திருடப்பட்ட சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகிய கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா

சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2021, 09:21 PM IST
  • திருடப்பட்ட சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகிய கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா
  • சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கலைப்படைப்புகள் இவை
  • ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது
Artefacts: திருடப்பட்ட சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகிய கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா title=

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப்படைப்புகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன.  

இந்திய கலைப்பொருட்களை திருப்பி தந்துவிடுவதாக ஆஸ்திரேலியாவின் தேசிய கேலரி (National Gallery of Australia)  வியாழக்கிழமையன்று அறிவித்தது அனைவரின் காதிலும் தேன் போல் இனிப்பான செய்தியாக வந்து விழுந்தது. 

மொத்தம் சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 14 கலைப்படைப்புகளை இந்தியாவுக்கு திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் குறைந்தது ஆறு திருடப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் ஒரு சுருள் ஆகியவை இதில் அடங்கும்.

Read Also | Archeology in Agaram: கிருஷ்ண தேவராயர் காலத்து செப்புப்பட்டயம் கண்டெடுப்பு!

சர்வதேச கடத்தல் மோசடியை நடத்தியதான குற்றச்சாட்டில் சிறையில் உள்ள மன்ஹாட்டன் கலைப்படைப்பு வியாபாரி சுபாஷ் கபூரிடமிருந்து பெறப்பட்ட 13 படைப்புகள் இந்த 14 படைப்புகளில் அடங்கும். மற்றொரு கலைப்படைப்பு நியூயார்க்கை தளமாகக் கொண்ட கலைப்படைப்பு வியாபாரி வில்லியம் வோல்ஃப் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது.

மொத்தம் சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த கலைப்பொருட்களில் ஆறு வெண்கல அல்லது கல் சிற்பங்கள், ஒரு பித்தளை சிலை, வர்ணம் பூசப்பட்ட சுருள் மற்றும் ஆறு புகைப்படங்கள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் உள்ளன.  

இவை அனைத்தும் 1989 மற்றும் 2009 க்கு இடையில் அருங்காட்சியகத்தால் கையகப்படுத்தப்பட்டவை. இவற்றில் சில சோழர் காலத்துக்கு முந்தையவை. இந்தியாவில் பல படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது திருடப்பட்டிருக்கலாம் என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

Also Read | கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

இந்தத் தகவலை AFP இடம் தெரிவித்தஆஸ்திரேலிய தேசிய கேலரி இயக்குனர் நிக் மிட்செவிச், "இந்த பொருட்களை இந்திய மக்களிடம் திருப்பித் தர முடிவது என்பது நிம்மதியை கொடுக்கிறது" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தேசிய கேலரி சிறையில் உள்ள கபூரிடம் இருந்து பெற்றா பல படைப்புகளை திருப்பி அளித்துள்ளது, இதில் தமிழக ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட சிவ பெருமானின் வெண்கல சிலையும் அடங்கும், அதன் மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தேசிய கேலரியின் முடிவை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஹைகமிஷனர் மன்பிரீத் வோஹ்ரா, "ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளத்திற்கு இந்திய அரசு நன்றி கூறுகிறது" என்று தெரிவித்தார். கலைப்படைப்புகளை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிக் மிட்செவிச் கூறினார்.

 

ALSO READ | தெருக்களில் ஊர்ந்து சென்ற முதலையால் மக்கள் பீதி -Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News