Indian Embassy: சூடானில் இந்திய தூரதரகம் வன்முறைக்கு பலியானதா? இடமாற்றத்திற்கான காரணம்?

Relocated Indian Embassy: சூடானில் உள்ள இந்திய தூரதரகம் இடம் மாற்றப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்ரிக்க நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம், தலைநகர் கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு மாற்றப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 3, 2023, 01:58 PM IST
  • சூடானில் உள்ள இந்திய தூரதரகம் இடம் மாற்றப்பட்டது
  • சூடான் நாட்டு தலைநகர் கார்ட்டூம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது
  • கார்ட்டூமில் இருந்து இந்தியத் தூதரகம் போர்ட் சூடானுக்கு மாற்றப்படுகிறது
Indian Embassy: சூடானில் இந்திய தூரதரகம் வன்முறைக்கு பலியானதா? இடமாற்றத்திற்கான காரணம்? title=

சூடான்: சூடானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 'ஆபரேஷன் காவேரி': வெளியேற்றும் திட்டத்தின் கீழ், இந்தியர்கள் வணிக விமானங்கள் அல்லது IAF இன் விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஜித்தா மற்றும் போர்ட் சூடானில் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன

வன்முறையில் தவிக்கும் சூடான்

வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து (Sudan Violence) மக்கள் வெளியேற்றப்படுவதற்கு இடையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியா தனது தூதரகத்தை வன்முறையால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளது.

மேலும் படிக்க | Sudan Violence: சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 11 நாட்டு மக்களை வெளியேற்றியது சவூதி அரேபியா

பாதுகாப்பு நிலைமை

தூதரக இடமாற்றம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் (Indian Ministry of External Affairs (MEA) ) செய்தி வெளியிட்டுஇள்ளது. இது தொடர்பாக மே இரண்டாம் தேதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக போர்ட் சூடானுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. நிலைமைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்" என்று தூதரக இடமாற்றம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

போர்ட் சூடான்

போர்ட் சூடான் என்பது கிழக்கு சூடானில் செங்கடலில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும், இது கார்ட்டூமிலிருந்து சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.கார்ட்டூமில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தூதரகம் மாற்றப்பட்டது என்று தூதரின் அறிக்கையை மேற்கோள் காட்டி சூடானின் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை இந்தியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கார்டூமில் வன்முறை

கார்டூமில் உள்ள கட்டிடம் ஆயுதம் ஏந்திய குழுவால் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது என்று சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆபரேஷன் காவேரிக்கு வசதி

"ஆபரேஷன் காவேரி" திட்டத்தின் கீழ் சூடானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டுள்ள  நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, இந்தியத் தூதரகம் போர்ட் சூடானிற்கு மாற்றப்படுவது வசதியாக இருக்கும். கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் அமைந்திருக்கும் பகுதியில் வன்முறைகளும் சண்டைகளும் அதிக அளவில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்! சிலிகானை தொடர்ந்து திவாலான பர்ஸ்ட் ரிபப்ளிக்!

சூடானில் இருக்கும் மக்களை வெளியேற்றும் திட்டத்தின் கீழ், இந்தியர்கள், வணிக விமானங்கள் அல்லது இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். ஜித்தா மற்றும் போர்ட் சூடானில் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன.

சூடானில் உள்ள இந்தியர்கள் "தூதரகத்தை பின்வரும் எண்களில் அணுகலாம்: +249 999163790; +249 119592986; +249 915028256 மற்றும் மின்னஞ்சல்: cons1.Khartoum@mea.Gov.In." என்று MEA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது:

சூடானில் போர் நிறுத்தம்
சூடான் ஆயுதப் படைகள் (SAF) மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) ஏழு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் தலைநகர் பிராந்தியத்தில் அதிகமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 330,000 சூடான் மக்கள் போரினால் நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையின் இறுதியில் சுமார் 800,000 பேர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் ஐ.நா இடம்பெயர்வு நிறுவனம் கணித்துள்ளது.

மேலும் படிக்க | Bizarre Dinner: நிர்வாண டின்னர் பார்ட்டி! உணவை ரசிக்க ஆடை எதற்கு? ஆடைக்குத் தடா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News