புது டெல்லி: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ஜே ரியான் (Dr Michael J Ryan) திங்களன்று கூறுகையில், இந்தியா மிகப்பெரிய திறன்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்மால் பாக்ஸ் (Small Pox) மற்றும் போலியோ (Polio) போன்ற கடுமையான நோய்களை ஒழிப்பதில் உலகை வழிநடத்தியது.
சீனாவைப் போலவே இந்தியாவும் அதிக மக்கள் தொகை கொண்டவை என்றும், இனி வரும் காலங்களில் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிக கொண்ட நாடுகளில் என்ன விதமான தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும் என்றும் ரியான் கூறினார்.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
India led the world in eradicating two silent killers - Small Pox and Polio. India has tremendous capacities, all countries have tremendous capacities when communities and civil societies are mobilized: WHO Executive Director Dr Michael J Ryan #Coronavirus https://t.co/3yyDh7CBbB
— ANI (@ANI) March 23, 2020
ஸ்மால் பாக்ஸ் மற்றும் போலியோ ஆகிய இரண்டு நோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகை வழிநடத்தியது. இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன்கள் உள்ளன. சமூகம் மற்றும் சிவில் சமூகங்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றும் போது உலகின் அனைத்து நாடுகளும் மிகப்பெரிய திறன்களைக் தன்வசமாக்கி கொள்கின்றன என்று அவர் கூறினார்.
சீனாவைப் போன்ற இந்தியா அதிக மக்கள்தொகை கொண்டது மற்றும் #COVID19 இன் எதிர்காலம் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட பெரிய நாடுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். பொது சுகாதார மட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்று WHO இயக்குனர் கூறினார்.
அதேபோல WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பத்திரிகையாளர்களிடம், "முதல் 100,000 வழக்குகளை அடைவதற்கு 67 நாட்கள், இரண்டாவது 100,000 வழக்குகளுக்கு 11 நாட்கள் மற்றும் மூன்றாவது 100,000 வழக்குகளுக்கு நான்கு நாட்கள் மட்டுமே ஆகும்" என்று WHO தலைவர் கூறினார்.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 468 ஆக உயர்ந்தது. 548 மாவட்டங்களை உள்ளடக்கிய 30 மாநிலங்களில் லாக்-டவுன் உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது.