கடன் உதவிக்கான நிபந்தனைகளை அதிகரிக்கும் IMF... சிக்கலில் பாகிஸ்தான்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 11:34 PM IST
கடன் உதவிக்கான நிபந்தனைகளை அதிகரிக்கும் IMF... சிக்கலில் பாகிஸ்தான்! title=

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF ) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நிதி உதவிக்கு உறுதியளித்த நாடுகளிடம் இருந்து உறுதிமொழிகளைப் பெறுமாறு IMF பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகியவை பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்தன. ஆனால், அவை இப்போது பின்வாங்குவதாகக் கூறப்படுகிறது.

IMF வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சவுதி அரேபியாவும் விரும்புகிறது. கடன் உதவி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன், பாகிஸ்தான் IMF  நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதனை செய்தால், பாகிஸ்தானில் அதிருப்தி ஏற்படும். பாகிஸ்தான் ஜூன் மாதத்திற்குள் சுமார் 3 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் 4 பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான்  வரிகள் மற்றும் மின்சார விலைகளில் செங்குத்தான அதிகரிப்பு உட்பட பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி... குறைந்தபட்ச கடனாவது தாங்க... கையேந்தும் பாகிஸ்தான்!

சர்வதேச நாணய நிதியத்தின் $6.5 பில்லியன் கடன் தொகுப்பை புதுப்பிக்க பாகிஸ்தான் அதன் நாணயத்தை பலவீனப்படுத்துகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாட்டிற்கு இந்த நிதி ஓரளவு நிவாரணம் அளிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய பிரச்சனை பெட்ரோலுக்கு வழங்கப்படும் மானியம். பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் பெட்ரோலுக்கு மானியம் வழங்கியதையடுத்து, ஐஎம்எஃப் திட்டத்தை முடக்கியது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலையை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு கடன் தேவைப்படும்போதோ, நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சவுதி அரேபியாதான் முதலில் உதவும் நாடாக இருந்தது. ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்று தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வட்டியில்லா கடனை வழங்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. இஸ்லாமிய நண்பரின் இந்த முடிவால் இஸ்லாமாபாத் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட பாகிஸ்தானுக்கு உதவ நட்பு நாடுகள் கூட தயாராக இல்லை என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். திவால் நிலையை தவிர்க்க பாகிஸ்தானுக்கு அவசரமாக மிகப்பெரிய அளவில் கடன் உதவி தேவைப்படுகிறது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது வெறும் 3 பில்லியன் டாலர்களாக உள்ளது.

மேலும் படிக்க | தன் வினை தன்னை சுடும்.... பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News