இத்தாலியின் மிதக்கும் அழகிய வெனிஸ் நகரத்தின் ‘பரிதாப’ நிலை!

வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன. கால்வாய்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம் தற்போது வறட்சியை சந்தித்து வருவதால், நகரத்தின் மீது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2023, 04:56 PM IST
  • கடல் அலைகள் குறைந்ததால் கால்வாய்கள் வறண்டு கிடக்கிறது.
  • இத்தாலி வறட்சியின் பிடியில் உள்ளது.
  • இத்தாலியின் இந்த அழகான நகரம் முற்றிலும் நீரினால் சூழ்ந்துள்ளது.
இத்தாலியின் மிதக்கும் அழகிய வெனிஸ் நகரத்தின் ‘பரிதாப’ நிலை!  title=

நாம் அனைவரும் சிறுவயதில் வெனிஸ் நகரம் குறித்த அழகிய கதையைக் கேட்டிருப்போம். இத்தாலியின் இந்த அழகான நகரம் முற்றிலும் நீரினால் சூழ்ந்துள்ளது. இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன. கால்வாய்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம் தற்போது வறட்சியை சந்தித்து வருவதால், நகரத்தின் மீது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன. இத்தாலி வறட்சியின் பிடியில் உள்ளது. அதன் நேரடி தாக்கத்தை இப்போது வெனிஸில் காணலாம். கால்வாய்களுக்கு பெயர் பெற்ற இந்த நகரம் இப்போது இருக்கும் நிலை மனதை சோகத்தில் ஆழ்த்தும்

ஸ்தம்பித்த நகரம்

இத்தாலியின் புகழ்பெற்ற நகரம் வெனிஸ் ஏரிகளில் அமைந்துள்ளது. இங்கு சாலை இல்லை. மக்கள் போகுவரத்திற்காக படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். தற்போது வறட்சி ஏற்பட்டால் படகுகளை இயக்க முடியாமல், போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்து விடும் நிலையில், மிகப்பெரிய பிரச்சனையை வெனிஸ் நகரம் சந்தித்துள்ளது.

வெனிஸ் நகரத்தின் வறட்சிக்கான காரணம் 

கடந்த ஆண்டு பனிப்பொழிவு குறைந்ததாலும், குளிர்காலத்தில் அதிக மழை பெய்ததாலும் நகரில் கால்வாய்கள் வறண்டுவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால், நகர் முழுவதும் வறட்சி நிலவுகிறது. உலகெங்கிலும் இருந்து சுற்றுலா மக்கள் அதிக அளவில் வருகை தரும் அதே நகரம் வெனிஸ், ஆனால் இப்போது இந்த இடம் இங்கு வாழும் மக்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது.

மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!

மக்களின் சிரமங்கள் அதிகரித்தன

தகவல்களின்படி, இந்த நகரம் அதன் உயர் அலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு வெள்ளம் போல் தண்ணீர் தேங்குவது வழக்கம், ஆனால் கால்வாய்கள் வறண்டு கிடப்பதால், சுற்றுலா பயணிகள் மட்டும் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர, இங்கு வசிக்கும் சாமானியர்களும் அடிப்படை வசதிகளுக்காக போராட வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

நகர கால்வாய்களின் நிலை 

வெனிஸ் அலை குறித்து வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் அல்விஸ் பாப்பா கூறுகையில், இது முற்றிலும் இயல்பான நிகழ்வு. கடல் அலைகள் குறைந்ததால் கால்வாய்கள் வறண்டு கிடக்கிறது என்று கூறுவது சரியாக இருக்காது. இந்த ஆண்டு அதிக வளிமண்டல அழுத்தம் காரணமாக அந்த கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. புதன் கிழமை நிலைமை இயல்பு நிலைக்கு வரக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு

வெனிஸ் நகரன் புகழுக்கான காரணம்

குறிப்பிடத்தக்க வகையில், இத்தாலியின் இந்த நகரம் அதன் கலை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாக கருதப்படுகிறது. வெனிஸ் மொத்தம் 120 தீவுகளைக் கொண்டது. நீர் மீது இருக்கும் நகரம், மிதக்கும் நகரம், கால்வாய்களின் நகரம், ஏரிகளின் நகரம் போன்ற பிரபலமான பெயர்களால் இது அறியப்படுகிறது.

மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News