எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது.
வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன. கால்வாய்களுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம் தற்போது வறட்சியை சந்தித்து வருவதால், நகரத்தின் மீது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன.
Continuing Drought In Europe: ஐரோப்பாவில் பல வாரங்களாக தொடரும் கடும் வறட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. வேறு வழியில்லாமல் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
56 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் தீவில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க அவசர கால நடவடிக்கை குழு அமைத்துள்ளது. நாட்டில் கிணறுகள் அமைக்கப்பட்டு, செயற்கையாக மேகங்களை உருவாக்கி மழை பெய்யச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன. சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.