Good News!! கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரசுக்கு சிரப் மருந்து.. ஏப்ரல் மாதத்தில் சோதனை..

கொரோனாவைத் தடுக்க மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மருத்துவ பரிசோதனையை நடத்தக்கூடும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 16, 2020, 08:39 PM IST
Good News!! கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரசுக்கு சிரப் மருந்து.. ஏப்ரல் மாதத்தில் சோதனை.. title=

பெய்ஜிங்: COVID-19 அதாவது கொரோனா வைரஸ் பற்றி பல நாட்களுக்குப் பிறகு நல்ல செய்தி வருகிறது. கொரோனாவைத் (Coronavirus) தடுக்க மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சீனா ஒரு மருத்துவ பரிசோதனையை நடத்தக்கூடும். 

சீனாவிலிருந்து பரவிய இந்த தொற்றுநோயிக்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டு வருவதாக சீனா கூறியுள்ளது. அதன் மருத்துவ பரிசோதனை விரைவில் செய்யப்படும். சோதனைக்குப் பிறகு, இந்த மருந்து விற்பனைக்கு சந்தையில் வரும். இன்னும் எவ்வளவு காலம் தான் ஆகும் என்று உலகளாவிய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சீனாவில் (China) மருந்து கண்டுபிடிக்க பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த உலகளாவிய தொற்றுநோயால் இதுவரை 5000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், இப்போது சீனா தனது ஆராய்ச்சி முன்னோக்கி நகர்கிறது மற்றும் விரைவில் தடுப்பூசி (Covid-19 Caccine) பரிசோதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மருத்துவ சோதனை என்றால் என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, மருத்துவ பரிசோதனைகள் என்பது ஆராய்ச்சியின் அடிப்படையில் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது பல ஆதாரங்களில் சோதிக்கப்படும், அதாவது முதலில் விலங்குகளுக்கு சோதனை செய்யப்படும். அதற்கு அடுத்தப்படியாக, கொரோனா நோயாளிக்கு, இந்த மருந்து என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எவ்வளவு காலம் ஆகும் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இருப்பினும், இது ஒரு நீண்ட செயல்முறை. மருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிறகும், சந்தைக்கு வர குறைந்தது 3 மாதங்கள் ஆகலாம்.

இஸ்ரேலும் கூறியுள்ளது!!

சீனாவுக்கு முன்பு, இஸ்ரேலும் இந்த மருந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி இந்த ஆபத்தான நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்ததாகக் கூறினார். கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் (Coronavirus Vaccine) தயாரிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானி கூறியிருந்தார். எங்கள் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஆராய்ச்சி செய்து வைரஸின் தன்மையைப் புரிந்து கொண்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி நெஃபடாலி பெனிட் கூறியிருந்தார்.

இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது:

இந்தியாவிலும், கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் பல ஆராய்ச்சி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோய்க்கு விரைவில் மருந்து கண்டுப்பிடிக்கப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்புகின்றனர்.

Trending News