பெண்களின் கருவுறுதல் விகிதத்தில் வீழ்ச்சி! உலகிலேயே சிக்கல் அதிகமுள்ள பெண்கள் கொண்ட நாடு

Dropping  Fertility Rates: ஒரு தென் கொரியப் பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022 இல் 0.78 ஆகக் குறைந்துள்ளது நீண்டகால அடிப்படையில் மிகவும் சிக்கலை ஏற்படுத்துகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 22, 2023, 02:38 PM IST
  • பெண்ணின் குழந்தை பெறும் விகிதம் குறைந்துள்ளது
  • குறைவான குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்டது தென் கொரியா
  • குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நாடுகள்
பெண்களின் கருவுறுதல் விகிதத்தில் வீழ்ச்சி! உலகிலேயே சிக்கல் அதிகமுள்ள பெண்கள் கொண்ட நாடு title=

குழந்தை பிறப்பு என்பது குடும்பத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமான ஒன்று. ஆனால், தொடர்ந்து பெண்களின் கருவுறும் தன்மை குறைந்து வருவது நீண்டகால அடிப்படையில் மனித குலத்திற்கு சிக்கலை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது, தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது மேலும் கவலைகளை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்த தென் கொரிய பெண்களின் கருவுறுதல் விகிதம், இந்த ஆண்டு மீண்டும் குறைந்துள்ளது.

பெண்ணின் குழந்தை பெறும் விகிதம்

உலகின் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்ட நாட்டிற்கான மற்றொரு கடுமையான நிலையாக இது பார்க்கப்படுகிறது. ஒரு தென் கொரியப் பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022 இல் 0.78 ஆகக் குறைந்துள்ளது,

ராய்ட்டர்ஸ் செய்தி

இது ஒரு வருடத்திற்கு முன்பு 0.81 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளியியல் தரவு, கொரியாவின் அதிகாரப்பூர்வ வருடாந்திர தரவுகளில் இருந்து பெறப்பட்டவை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உள்ள நாடுகளில் இது மிகக் குறைவானதாகும், இதுவே தென்கொரியாவில் 2020 இல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு சராசரியாக 1.59 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறப்பு புள்ளியியல் தரவு

2020 இல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு  என்பது, அமெரிக்காவில் 1.64 மற்றும் ஜப்பானில் 1.33 க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, குழந்தைகள் பெறும் தன்மை குறைந்து வருவது மிக தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!

குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், குழந்தை பராமரிப்பு மானியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்த போதிலும், வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்க முடியாமல், தென் கொரிய அரசு தவிக்கிறது.

குறைவான குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்ட தென் கொரியா

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, OECD உறுப்பினர்களில் 1-க்கும் குறைவான விகிதத்தைக் கொண்ட ஒரே நாடு தென் கொரியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில், மக்கள்தொகை மளமளவென்று குறைந்து வருகிறது. இது எதிர்காலத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் இல்லாத நாடாக மாறும் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!

ஏன் குழந்தை பிறப்பு குறைந்தது?

தென் கொரியாவில் குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். வீட்டுவசதி மற்றும் கல்விக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், தற்போது, தென் கொரியாவில் திருமணம் செய்து கொள்வதற்கான மக்களின் விருப்பத்திலும் சுணக்கம் ஏற்பட்ட்டுள்ளது. நாட்டின் தலைநகரான சியோல் மிகக் குறைந்த பிறப்பு விகிதமான 0.59ஐ பதிவு செய்துள்ளது.

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் சீனா

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா, புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகிறது. நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு சீனா தாராளமாக சலுகைகளை வழங்கும் நடவடிக்கைகளை சீனா எடுத்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறை

சீன மாகாணங்களில் சில 30 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றன. இதேபோன்ற குழந்தை பிறப்பு ஊக்குவிப்பு நடவைக்கைகளை ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மக்கள்தொகையை அதிகரிக்க திட்டம் போடும் நாடு! 30 நாள் சம்பளத்துடன் திருமண விடுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News