'இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் கொண்டு வர ஆசைதான்; ஆனால்' : Elon Musk

பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2021, 01:20 PM IST
  • பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
  • டெஸ்லா கார்களை இந்தியாவில் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என எலன் மஸ்க் அவர்களை டேக் செய்து யூடியூபர் மதன் கெளரி பதிவிட்டு இருந்தார்.
  • இறக்குமதி வரியை குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் கொண்டு வர ஆசைதான்; ஆனால்' : Elon Musk   title=

பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 

அதை பிரதிபலிக்கும் விதமாக பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெஸ்லா கார்களை இந்தியாவில் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என எலன் மஸ்க் அவர்களை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்

அந்த பதில் ட்வீட்டில், ” நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இறக்குமதி வரிகள் இந்தியாவில், எல்லா நாட்டையும் விட அதிகம். மேலும், சுற்று சூழலை பாதிக்காத எரிசக்தி வாகனங்கள் மீதான வரி கூட, டீசல் அல்லது பெட்ரோல்  வாகங்களை போலவே போடப்படுகின்றன. இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு முற்றிலும் மாறானதாக உள்ளது.  எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிகமாக சிறிது  நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் ” என எலன் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இது குறித்து டெஸ்லா நிறுவனம் தரப்பில் இருந்து இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட டெஸ்லா நிறுவனம் , மத்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான வரிகளை 40% ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News