பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம்; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது...
பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. சிலி நாட்டின் ஆளுமைக்கு உற்பட்ட இந்த தீவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 7 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தீவில், உள்ளூர் நேரப்படி காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of magnitude 6.2 hit Easter Island at 7.07 am (IST) today
— ANI (@ANI) December 19, 2018