Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China ஒப்புக் கொள்வது ஏன்?

Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China இப்போது ஒப்புக் கொள்வது ஏன்? அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் சீனா

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 07:31 PM IST
  • உய்குர் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்
  • துருக்கிய சிறுபான்மையினரும் வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்
  • இந்த தடுப்பு முகாம்களை "தொழில் பயிற்சி மையங்கள்" என்கிறது சீனா
Uyghur முஸ்லிம்களை சிறையில் அடைத்ததை China ஒப்புக் கொள்வது ஏன்? title=

புதுடெல்லி: பயங்கரவாத குற்றச்சாட்டில் உய்குர் முஸ்லிம் ம்ருத்துவர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது சீனா. அதுவும் அவர் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும், அதை ஏன் இப்போது சீனா ஒப்புக் கொள்கிறது என்பதும் கேள்விகளை எழுப்புகின்றன.

பயங்கரவாத குற்றச்சாட்டில் உய்குர் முஸ்லீம் மருத்துவர் (Uyghur Muslim doctor) ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீனா வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. 20 ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறிய அடுத்த நாள் சீன அரசு இந்த விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளது.

சீனாவில் சிறுபான்மை சமூகமான உய்குர் முஸ்லிம்களின் (Uyghur Muslim) உரிமைகள் தொடர்பான விஷயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குல்ஷன் அப்பாஸ்-இன் (Gulshan Abbas) உறவினர்கள் அமெரிக்க காங்கிரஸ் குழுவிடம் புதன்கிழமையன்று தெரிவித்தனர்.

Also Read | Coronavirus ஜுலைக்குள் ஒழிய வேண்டுமா? இது மட்டும் நடந்தால் போதும்…

இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin) வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.  "ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதத்தில் (Organised Terrorism) பங்கேற்றது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியது மற்றும் சமூக ஒழுங்கை கடுமையாக சீர்குலைத்ததது" போன்ற குற்றங்களை செய்ததால் அப்பாஸுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

”அமெரிக்கா உண்மைகளை மதிக்க வேண்டும், சீனாவைப் பழிவாங்குவதற்காக பொய்களைத் தயாரிப்பதை நிறுத்துங்கள்" என்றும், இது சீனாவின் (China) உள் விவகாரம், இதில் தலையிட வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இல்லை” என்று அவர் கூறினார்.

சுமார் ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற துருக்கிய சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Also Read | Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

இந்த தடுப்பு முகாம்களை "தொழில் பயிற்சி மையங்கள்" (vocational training centres) என்று சீனா விவரிக்கிறது. ஆனால் கைதிகள் சித்திரவதை மற்றும் கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுவதாக மனித உரிமை குழுக்கள் (Human Rights) சீனாவின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News