07:41 01-02-2020
ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் சனிக்கிழமை காலை சீனாவின் வுஹான் விமான நிலையத்திலிருந்து டெல்லி விமான நிலையத்தை அடைந்தது. வுஹான் ஹூபேயின் மாகாண தலைநகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். 700 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கு வாழ்கின்றனர். சீனாவில் இதுவரை 213 பேரை கரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
Air India special flight carrying 324 Indians that took off from Wuhan (China) lands in Delhi. #Coronavirus
— ANI (@ANI) February 1, 2020
புது டெல்லி: ஏர் இந்தியா சிறப்பு விமானம் வுஹானில் (சீனா) இருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஏ.என்.ஐ (ANI) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்கள் இரண்டு விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் பகுதியாக ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் 324 இந்திய பயணிகள் புறப்பட்டு விட்டதாகவும், அந்த விமானம் காலை 7.30 மணிக்கு டெல்லியை அடையும் எனவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது குடிமக்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வெளியேற்றத் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக முதல் விமானம் வுஹானில் இருந்து இன்று காலை டெல்லி வந்தடையும்.
Air India Spokesperson: Air India special flight takes off from Wuhan (China) with 324 Indians on board. #Coronavirus https://t.co/kgrd7kTxjT pic.twitter.com/FRDJIo7X3E
— ANI (@ANI) January 31, 2020
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை:
சீனாவின் வுஹானில் படித்துக்கொண்டிருந்த பதினான்கு மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களில் மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்திற்கு திரும்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர். இந்த மாணவர்கள் மும்பை விமான நிலையத்திலும், பின்னர் உள்ளூர் மருத்துவமனைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனத் தூதர் சன் வீடோங்
தொற்றுநோய் மற்றும் தடுப்பு முயற்சிகள் குறித்து சீனா இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம், இந்தியாவின் நோயின் அறிகுறிகள் இருந்தால் முறையாக தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.
கேரள சுகாதார அமைச்சர்:
கொரோனா வைரஸ் நோயாளியின் நிலை மேம்பட்டு வருகிறது. இப்போது எந்த அறிகுறிகளும் இல்லை. இன்று, நோயாளியின் மாதிரி புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாதிரி எதிர்மறையாக இருந்தால், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே. சைலாஜா கூறியுள்ளார்.
ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம்:
2020 ஜனவரி 1 முதல் சீனா அல்லது தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் மேற்கொண்டர்வகளுக்கு காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், அருகிலுள்ள சுகாதார மையத்தில் சுகாதார பரிசோதனைக்கு அனைத்து நபர்களும் வரவேண்டும் என ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.