Xi Jinping in Russia: சீன அதிபர் ஜி ஜின்பிங் திங்கள்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அவர் உக்ரைன் போரில் சமாதானத்தை ஏற்படுத்த முயல கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் சீன தனக்கு ஆதரவு தர வேண்டும் எதிர்பார்க்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் போருக்குப் பிறகு சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியதற்காக புடினுக்கு ICC கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம்
ஜி ஜின்பிங் திங்கள்கிழமை ரஷ்யா வந்தடைந்தார். ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஜின்பிங் - புடின் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜின்பிங்கின் வருகையை சீனாவும் ரஷ்யாவும் வர்ணித்துள்ளன. உக்ரைனுக்கான சீனாவின் அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ள கிரெம்ளின், புடின் மற்றும் ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இரவு உணவுக்குப் பிறகு கூட்டம் தொடங்கும்
இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் 'நண்பர்கள்' இடையே இரவு உணவுக்குப் பிறகு சந்திப்பு திங்கட்கிழமை தொடங்கும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக் கிழமையன்று புட்டினை போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் ஜின்பிங்கின் ரஷ்ய பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த வாரண்ட் பயனற்றது என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா ஐசிசியில் உறுப்பினராக இல்லாததால் அதன் சட்டங்கள் ரஷ்யாவில் பொருந்தாது.
புதினை ஆதரிப்பாரா ஜின்பிங்
உக்ரைன் போருக்குப் பிறகு ஒட்டுமொத்த மேற்கு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியபோது, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய நாடுகளில் சீனாவும் இருந்தது. இருப்பினும், புதினுக்கு வெளிப்படையாக உதவுவது ஜின்பிங்கிற்கு அவ்வளவு எளிதானது அல்ல. இது சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கலாம். ஜி ஜின்பிங்கின் வருகையை மேற்குலகுக்கு எதிரான 'சக்திவாய்ந்த நண்பருக்கான ஆதரவாக' ரஷ்யா முன்னிறுத்துகிறது. இந்த மாதம் மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு ஜி ஜின்பிங்கின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
மேலும் படிக்க | விளாடிமிர் புடின் உலகின் ‘இந்த’ 123 நாடுகளில் அடியெடுத்து வைத்தால் கைது: ICC