Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம்

Cloning Cow: சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 'சூப்பர் மாடுகளை' குளோனிங் செய்துள்ளனர். நாட்டின் பால்தேவைக்காக வெளிநாட்டு மாடுகளின் இனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த மாடுகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 02:18 PM IST
  • கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீனா
  • ஜனவரியில் மூன்று க்ளோனிங் கன்றுகள் பிறந்தன
  • கறவை மாட்டுக்கான சார்பை தவிர்க்கும் சீனா
Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம் title=

சீன விஞ்ஞானிகள் 'சூப்பர் பசுக்கள்' என்று அழைக்கப்படும் குளோனிங் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பசுக்கள் தங்கள் வாழ்நாளில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு இனங்களை சீனா சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பசுக்கள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் குளோபல் டைம்ஸின் கூற்றுப்படி, சீனாவின் கறவை மாடுகளில் 70 சதவீதம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 'சூப்பர் மாடுகளை' குளோனிங் செய்திருப்பது தொடர்பாக அந்நாட்டில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால்,  நாட்டின் பால்தேவைக்காக வெளிநாட்டு மாடுகளின் இனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த மாடுகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

'சூப்பர் பசுக்கள்' என்பது சீனாவின் வடமேற்கு வேளாண்மை மற்றும் வனவியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் குளோனிங் செய்யப்பட்ட மூன்று கன்றுகள் ஆகும். இந்த கன்றுகள் ஜனவரி 23 ஆம் தேதிக்கு முந்தைய வாரங்களில் Ningxia பகுதியில் பிறந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

திட்டத்தின் முன்னணி விஞ்ஞானி ஜின் யாப்பிங், வெற்றிகரமான குளோனிங்கை ஒரு 'திருப்புமுனை' நடவடிக்கை என்று விவரித்தார்.

“இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 1,000 சூப்பர் பசுக்களைக் கொண்ட ஒரு மந்தையை உருவாக்க  எடுக்க திட்டமிட்டுள்ளோம், இது, வெளிநாட்டு கறவை மாடுகளை நம்பியிருப்பதையும், சீனாவில் சப்ளை சங்கிலி சீர்குலைவுகளால் ஏற்படும் அபாயத்தையும் சமாளிக்க ஒரு உறுதியான அடித்தளமாக இருக்கும்’  என்று திட்டத்தின் முன்னணி விஞ்ஞானி ஜின் யாப்பிங், ஜின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | KOLLU: ஒல்லியாகனுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ‘இதை’ தினசரி சாப்பிட்டா போதும்

குளோனிங் செய்யப்பட்ட மாடுகள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டச்சு ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் இனத்தில் இருந்து குளோனிங் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

குளோன் செய்யப்பட்ட பசுக்கள் தங்கள் வாழ்நாளில் 100 டன் பால் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவில் உள்ள சராசரி பசுவை விட கிட்டத்தட்ட 1.7 மடங்கு அதிகம் என்பதால் எதிர்காலத்தில் பால் உற்பத்தியில் சீனா தன்னிறைவு அடையும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News