பிரேசில் அதிபர் பதவி கோரி வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்; காரணம் என்ன..!!!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என கோரி சனிக்கிழமையன்று பல பிரேசிலிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2021, 12:45 PM IST
பிரேசில் அதிபர் பதவி கோரி வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்; காரணம் என்ன..!!! title=

பிரேசில் (Brazil) அதிபர் ஜெய்ர் (Jair Bolsonaro) போல்சனாரோ பதவி விலக வேண்டும் என கோரி சனிக்கிழமையன்று பல பிரேசிலிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். 

போல்சனாரோ (Jair Bolsonaro) அடுத்த ஆண்டு மறுதேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த வாரம், பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சகம், அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்காது என்றும் நாட்டின் மின்னணு வாக்குப்பதிவு முறையில், ஒப்புகை சீட்டு முறையை அறிமுகப்படுத்தி, வாக்கு எண்ணிக்கையை சரிபடுத்தாமல், தேர்தல்கள் நடத்துவது சாத்தியமல்ல என கூறியதை அடுத்து, போராட்டம் வெடித்துள்ளது. 

வலது சாரி தலைவரான போல்சனாரோ அடுத்த ஆண்டு மறு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் இடதுசாரி அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை அவர் எதிர்கொள்ள உள்ள நிலையில்,  போல்சனாரோவுக்கு ஆதரவு குறைந்து வருவதால், அவர் தோற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

ALSO READ | Dubai: 'பிளாக் டயமண்ட்' ஐஸ்கிரீம் விலை ₹60,000; அப்படி என்ன தான் இருக்கு..!!

தொற்று நோயை கையாண்ட விதம்,  ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு  மத்தியில் பிரிசில் அதிபர் போல்சனாரோவிற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. போல்சனாரோவை எதிர்க்க பிரேசிலியர்கள்  வீதிகளில் இறங்கியிருப்பது, இந்த மாத்தத்தில் இது இரண்டாவது முறையாகும்.

பிரேசிலில், 500,000 க்கும் மேற்பட்டவர்கள் COVID-19 காரணமாக இறந்துவிட்டனர். அவர் நோயின் தீவிரத்தை குறைவாக மதிப்பிட்டு, சரியான நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு காரணம் என விமர்சங்கள் வைக்கப்படுகின்றன. மேலும்,  மாஸ்க் அணிதம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற  நடவடிக்கைகள் தேவையில்லை என்பது போல் கூறி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதற்காகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்தும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Brazil: பிரேசில் அதிபரை பத்து நாட்களாக விடாது துரத்தும் விக்கல் ..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News