Viral Video Fact Check: பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது சொந்த மகளையே திருமணம் செய்துகொண்டுள்ளார் என தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவின. இந்தச் சூழ்நிலையில் அதில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், தன் தந்தையை திருமணம் செய்துகொண்டதை அந்த மகளே ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டது தான்.
இதன்மூலம், அந்த நபருக்கு அவரின் மகள் நான்காவது மனைவியாகிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. மேலும் அவர்களின் திருமண வீடியோ என கூறப்படும் பதிவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவால் சர்ச்சை
பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவின் சரியான இடம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட தேதி உள்ளிட்டவை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இது பரவலான விவாதங்களுக்கும் பல்வேறு எதிர்வினைகளுக்கும் வழிவகுத்தது. இத்தகைய அசாதாரண திருமணம் குறித்து பயனர்கள் விமர்சனம், அதிர்ச்சி மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இதில் பரப்பப்படும் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவது முக்கியமாகும்.
Daughter justifying being 4th wife of her father pic.twitter.com/7vOrjGuBDD
— Hemir Desai (@hemirdesai) July 6, 2023
தந்தையை திருமணம் செய்யவில்லை...
வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் குறிப்பிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படாத நிலையில், அந்தப் பெண்ணே தனது திருமணத்திற்கான காரணத்தை விளக்க முன் வந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் ராபியா. வைரல் வீடியோவில் கூறப்பட்ட கூற்றுகளுக்கு மாறாக, ராபியா தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொள்ளவில்லை.
எதனால் வந்தது குழப்பம்?
வீடியோவில் இருக்கும் அந்த நபர், ராபியாவின் கணவர் தான், தந்தை இல்லை. ராபியாவின் கணவரான அமிர் கான் மூன்று பெண்களை மணந்து, அவர்களை விவாகரத்து செய்துவிட்டார். நான்காவது மனைவியாக ராபியாவை மணந்துகொண்டார். அந்த வீடியோவில் ராபியாவின் விளக்கத்தை பலரும் தவறாக புரிந்துகொண்டனர். பொதுவாக பாகிஸ்தான் கலாச்சாரத்தில் ராபியா என்ற பெயர் நான்காவது மகளுக்கு வைக்கப்படும் பெயராகும். எனவே, இதில் இருந்து தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
A lot of RW handles like @kajal_jaihind are known to share Misinformation.
Do listen to the video again, She's not his daughter as you all claim.
Also, The guy (Amir Khan) in the video divorced his 3 wives and got married to Rabia. Not to his daughter as claimed by Right Wing. https://t.co/bqrVjh0BW2 pic.twitter.com/tDmIzeYgdt— Mohammed Zubair (@zoo_bear) July 8, 2023
பெண்ணே அளித்த விளக்கம்
வைரலான வீடியோவில் கூறப்பட்ட கூற்றுகளை மறுத்த பெண், "நான் எனது பெற்றோரின் நான்காவது மகள் அல்ல; நான் இரண்டாவது மகள். பெயருக்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள வேண்டும் என்பதால் இவரை திருமணம் செய்துகொண்டு, இவரின் நான்காவது மனைவியாகிவிட்டேன்" என விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தானில் பெயர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கலாச்சார முக்கியத்துவத்தை இந்த பெண்ணின் விளக்கம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அங்கு சில பெயர்கள் பாரம்பரியமாக பிறப்பு வரிசையுடன் தொடர்புடையவையாக உள்ளது.
முற்றிலும் தவறு
ட்விட்டர் பயனர் ஹமீர் தேசாய் என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இதன்மூலம், பல பயனர்களின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், அவரது ட்வீட் மற்றும் அதனால் ஏற்பட்ட அடுத்தடுத்த விவாதங்கள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அந்த பெண்ணே உறுதிப்படுத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மை சரிபார்ப்பு
எங்களின் உண்மை சரிபார்ப்பு (Fact Check) விசாரணையின் அடிப்படையில், அந்த பாகிஸ்தானியப் பெண் தனது சொந்த தந்தையை மணந்து, அவருடைய நான்காவது மனைவியானார் என்ற கூற்று தவறானது என தெரியவந்தது. தனது தந்தையின் இரண்டாவது மகளான அந்த பெண், தான் திருமணம் செய்து கொண்டது தனது தந்தையை அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். சமூக ஊடக தளங்களில் பரவும் வைரல் வீடியோக்கள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்கள் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது மற்றும் தகவலைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ