Space Anaemia: விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாகும் ‘விண்வெளி ரத்த சோகை’!

செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா என்பதையும் பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தொடர்ந்து விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில், பல சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2022, 04:58 PM IST
Space Anaemia: விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாகும் ‘விண்வெளி ரத்த சோகை’! title=

செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா என்பதையும் பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தொடர்ந்து விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில், பல சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர். உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்த சிவப்பணுக்கள் ஒரு சவாலாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

விண்வெளி பயணம் என்பது தற்போது சுற்றுலா போல் ஆகி விட்ட நிலையில், விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல, விண்வெளிப் பயணிகளும் கூட இரத்த சோகை அல்லது இரத்த சிவப்பணு குறைபாடு  காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO RED | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!

விண்வெளி வீரர்களுக்கு "விண்வெளி இரத்த சோகை" ஏற்படுவதாக கூறப்படுகிறது, ஆனால் அது தற்காலிகமானது என்று நம்பப்பட்டாஅலும் இதன் பாதிப்பு நீண்ட நாள் இருக்கும் என ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளது. இப்போது, ​​இரத்த சோகை என்பது விண்வெளிக்குச் செல்வதன் முதன்மை பக்க விளைவு என்று ஆராய்ச்சி கூறுகிறது.

நாசாவின் ஆய்வில் இது "15 நாள் நோய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்த சிவப்பணுக்களின் அழிவு அல்லது ஹீமோலிசிஸ், விண்வெளி வீரர்கள் புவீஇர்ப்பு இல்லாத இடத்தில் இருந்து விட்டு. புவி ஈர்ப்பு விசை உள்ள பூமிக்கு வரும் போது, இந்த மாற்றத்தை உடல் ஏற்றுக் கொள்ளும் அந்த கால கட்டத்தில், அதன் பக்க விளைவாக இந்த ரத்த சோகை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கனடா விண்வெளி ஏஜென்சியின் நிதியுதவியுடன் 14 விண்வெளி வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் டாக்டர் கை ட்ரூடல், இந்த விஷயத்தில் முக்கியமான தரவுகளை கொண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக  கூறினார்.

உங்கள் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்போது விண்வெளியில், இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் பூமியில் தரையிறங்கும் போது, பிற கிரகங்களிலும், இரத்த சோகை விண்வெளி வீரர்களின் ஆற்றல், சகிப்புத்தன்மை மற்றும் வலிமையை பெரிதும் பாதிக்கலாம் என்றும் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

ALSO READ | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்

பூமிக்கு திரும்பிய ஒரு வருடம் கழித்தும் கூட, விண்வெளி வீரர்களின் இரத்த சிவப்பணுக்கள், விண்வெளி பயணத்திற்கு முந்தைய நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை என்று அவரது குழு வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) நேச்சர் மெடிசின் என்னும் இதழில் தெரிவித்துள்ளது.

ஆய்வின் போது, ​​சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஆறு மாதங்களில் விண்வெளி வீரர்களின் உடல்கள் ஒவ்வொரு நொடியும் மூன்று மில்லியன் இரத்த சிவப்பணுக்களை அழிக்கிறது என்பதை ட்ரூடலின் குழு கண்டறிந்தது.

சராசரியாக, உடல் வினாடிக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்களை அழித்து - மாற்றுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆய்வின் போது, 50% அதிக சிவப்பு அணுக்களை எவ்வளவு காலம் உடல் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியும் என்பது போன்ற முக்கியமான கேள்விகளை ட்ரூடல் முன்வைத்தார். விண்வெளி வீரர் காயமடைந்து இரத்தம் கசிந்தால் என்ன செய்வது என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

ALSO READ | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News