அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டியுள்ள சீனா, அருணாச்சல பிர்சேதத்தை உரிமை கோரும் வம்பை மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தை, தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி எனவும், அதில் தங்களுக்கு உரிமை உள்ளது என மீண்டும் சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அருணாச்சல பிரதேச விவகாரம்
சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, இதை 'தெற்கு திபெத்' என அழைக்கிறது. அவ்வப்போது அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் சீன படைகள் இங்குவதும் வழக்கம். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
அருணாச்சல பிரதேசத்தில் ஜி20 மாநாடு
இந்தியா அருணாச்சல பிரதேசத்தில் ஜி20 மாநாடு நடத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா நடத்தும் நாடகத்தின் பின்னணி என்ன?
இதன்பிறகு, கொஞ்சம் அடக்கி வாசித்த சீனா, மீண்டும் தனது வம்பு வேலையைத் தொடங்கியிருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், 'ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி. அதனால் தான் சீன அரசின் தொடர்புடைய செயல் அதிகாரிகள் சில பகுதிகளுக்கு பெயர்களை மாற்றி தர வரிசைப்படுத்தி உள்ளனர். மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்களுக்கான நிர்வாகத்தினரின் தொடர்புடைய நிபந்தனைக்கு உட்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டே இந்த பெயர் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்த நாட்டு மக்கள் ஓமனுக்கு செல்ல விசா தேவை இல்லை: முழு பட்டியல் இதோ
எனவே, நீறு பூத்த நெருப்பாய் இருந்துவந்த அருணாசல பிரதேச விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இதற்கு முன்னதாக, அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி உறுதிபட தெரிவித்தார்
அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அரிந்தம் பாக்சி, "இதுபோன்ற சீனாவின் செயல்கள் சர்ச்சையை எழுப்புகின்றன. சீனா இத்தகைய முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்” என்றார்.
"அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும். சீனா தனது னம்போன போக்கில் பெயர்களை சூட்டினால் அது நிலைமையை மாற்றாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை அமெரிக்கா "கடுமையாக எதிர்க்கிறது" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"இது இந்தியப் பிரதேசத்தின் மீது அத்துமீறும் சீனாவின் மற்றொரு முயற்சியாகும். வேறொரு நாட்டின் பெயர்களை மாற்றுவதன் மூலம் பிராந்திய உரிமைகோரலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக அமெரிக்கா எதிர்க்கிறது" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீன எழுத்துக்கள், திபெத்தியன் மற்றும் பின்யின் ஆகிய எழுத்துக்களில் சீனா வெளியிட்டது, மாநில கவுன்சில், சீன அமைச்சரவை வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்து குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, அருணாச்சல பிரதேசத்தில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புவியியல் பெயர்களின் மூன்றாவது தொகுதி இதுவாகும். செய்தி அறிக்கையின்படி, ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் தொகுதி 2017 இல் வெளியிடப்பட்டது, மேலும் 15 இடங்களின் இரண்டாவது தொகுதி 2021 இல் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களை "தனது சொந்த மொழியில்" மறுபெயரிட சீனா முயற்சிப்பதாகக் கூறப்பட்ட செய்திகளைக் கண்டதாகக் கூறிய மத்திய அரசு, இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது என்றும் அது எப்போதும் இருக்கும் என்றும் வலியுறுத்தியது.
மேலும் படிக்க | அபுதாபியில் புதிய விசா ஸ்க்ரீனிங் மையம் திறக்கப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ