உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை

முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2022, 10:06 AM IST
  • உக்ரைனுக்கு எதிராக இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக்கூடும்.
  • ஆதாரம் இல்லாமல் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது என்று ரஷ்யா பதிலடி
  • உக்ரைன் ரசாயன வெடிகுண்டு தயாரித்ததாக ரஷ்யா கூறியது.
உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை title=

ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் புதன்கிழமை, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்தது. உக்ரைனில் சட்டவிரோதமான இரசாயன ஆயுதங்களை உருவாக்குவதாக கூறப்படும் ரஷ்யாவின் கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது.

இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா,  உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் கூற்று "அபத்தமானது" என்றும் உக்ரைனுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

"இது உக்ரைன் மீதான. தனது மேலும் திட்டமிடப்பட்ட, நியாயமற்ற தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கும் ரஷ்யாவின் வெளிப்படையான சூழ்ச்சியாகும்" என்று Psaki புதன்கிழமை ட்வீட் செய்தார்.  ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அல்லது அவற்றைப் பயன்படுத்ததற்கான திட்டத்தை உருவாக்கும் ஒரு பகுதி என எச்சரித்த அமெரிக்கா, ரஷ்யாவின நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது. ரஷ்யாவிலிருந்து அனைத்து வகையான எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று தெரிவித்தார்.

இருப்பினும், இதனால், அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் தெரிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News